Published:Updated:

மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் 5 பேருக்கு அமைச்சர் பதவி

மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் 5 பேருக்கு அமைச்சர் பதவி
மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் 5 பேருக்கு அமைச்சர் பதவி

கோலாலம்பூர்: மலேசியாவில் 5 இந்திய வம்சாவழியினருக்கு அமைச்சர்களாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மலேசியாவில் கடந்த 5ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் வெற்றிப் பெற்ற நஜீப் ரசாக் பிரதமரானார். அவர் தனது மந்திரி சபையில் ஐந்து இந்திய வம்சாவழியினருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்.

அதில் மலேசிய இந்திய காங்கிரச் கட்சி தலைவர் பழனிவேலுக்கு இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டு அவர் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

##~~##
அதேபோல் சுகாதார துறை அமைச்சராக எஸ்.சுப்ரமணியம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சராக எம்.சரவணன், கல்வி மற்றும் உயர்கல்வி துறை அமைச்சராக பி.கமலநாதனும், இந்து உரிமைகள் இயக்க தலைவர் பி.வைத்திய மூர்த்தி பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.