Published:Updated:

``எதிரிகள் யார் என்று இருநாட்டு மக்களுக்கும் தெரியும்!” -மலாலா

``எதிரிகள் யார் என்று இருநாட்டு மக்களுக்கும் தெரியும்!” -மலாலா
``எதிரிகள் யார் என்று இருநாட்டு மக்களுக்கும் தெரியும்!” -மலாலா

போர் ஏற்பட்டால் அப்பாவி பொதுமக்கள் ஏராளமான துன்பத்தைச் சந்திக்க நேரிடும் என நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் மாணவி மலாலா தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப்பகுதியில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய வீரர் அபினந்தனைப் பிடித்து வைத்துள்ளதாக பாகிஸ்தான் வீடியோ வெளியிட்டது.

இதுகுறித்து பேசியுள்ள நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் மாணவி மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில், ``நோபல் பரிசு பெற்றவளாக, ஐநாவின் அமைதி தூதராக, பாகிஸ்தான் குடிமகளாக, ஒரு மாணவியாக நான் கூறுவது, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் ஏற்பட்டால் இருநாடுகளிலும் இருக்கும் அப்பாவி பொதுமக்களுக்குப் பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்.  போரைத் தொடங்குவது என்பது எளிது. ஆனால் அதை முடிப்பது கடினமான காரியம்.  

இந்தத் தருணத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும் தங்களது தலைமைப் பண்பை காண்பிக்க வேண்டும். இருவரும் கைகுலுக்கி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவ்வாறு செய்தால் இருநாடுகளுக்கிடையேயான பதற்றம் தனியும். காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தைக்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன்மூலம் ஏராளமான உயிர்ச்சேதங்கள் தவிர்க்க முடியும்.  தீவிரவாதம், வறுமை, படிப்பறிவில்லாததுதான் நம் எதிரிகள் என இருநாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.