Published:Updated:

14வது திருமணத்துக்கு ஆசைப்பட்ட மன்னர்: தப்பியோடிய 15 வயது பெண்!

14வது திருமணத்துக்கு ஆசைப்பட்ட மன்னர்: தப்பியோடிய 15 வயது பெண்!
14வது திருமணத்துக்கு ஆசைப்பட்ட மன்னர்: தப்பியோடிய 15 வயது பெண்!

லண்டன்: தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சுவாசிலாந்து நாட்டின் மன்னர், 7 ஆண்டுக்கு முன்பு 14வதாக திருமணம் செய்ய, தேர்வு செய்யப்பட்ட 15 வயது பெண் அங்கிருந்து தப்பியோடு இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார்.

14வது திருமணத்துக்கு ஆசைப்பட்ட மன்னர்: தப்பியோடிய 15 வயது பெண்!

தென்னாப்பிரிக்க நாட்டின் சுவாசிலாந்து 3வது மன்னர் சுவாதி (45). இவர் ஏற்கனவே 13 முறை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 27 குழந்தைகள் இருக்கின்றன. அப்படி இருந்தும் இவருக்கு திருமண ஆசை விடவில்லை. ஆண்டு தோறும் இங்கு நடக்கும் திருவிழாவில் பெண்கள் நிர்வாண நடனம் ஆடும்போது அதிலிருந்து ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து தனது மனைவியாக்கிக் கொள்வார்.

சுமார் 7 வருடத்திற்கு முன்பு, இவரது பார்வை 15 வயதான டின்ஸ்வாலோ நகோபெனி என்ற பெண்ணின் மீது விழுந்தது. மன்னரின் ஆசையை அறிந்ததும் நகோபெனி சுவாசிலாந்தில் இருந்து தப்பி, இங்கிலாந்திலுள்ள பர்மிங் ஹாம் என்ற இடத்தில் வசித்து வருகிறார். தற்போது அவருக்கு வயது 22. நகோபெனி இங்கிலாந்து அரசிடம், ''சுவாசிலாந்து மன்னரின் விருப்பத்திற்கு தான் உடன்படாவிட்டால் தன்னைக் கைது செய்து விடுவார்கள் அல்லது என்னை கொன்று விடுவார்கள். எனவே என்னை சுவாசிலாந்து அனுப்பி விடாதீர்கள் '' என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

##~~##
மன்னர் குறித்து நகோபெனி கூறுகையில், ''மன்னர் சுவாதி ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர். அரண்மனைக்குள்ளேயே தனது மனைவிகளை அடைத்து வைத்திருக்கிறார். மன்னரின் உத்தரவு இல்லாமல் எந்தவொரு மனைவியும் வெளியில் செல்ல முடியாது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அமெரிக்காவுக்கு அனுப்புவார். வருடத்திற்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் அவர், நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே என்னிடம் அரண்மனை ராணியாக விரும்புகிறாயா? என்று கேட்டார். எனக்கு பயமாக இருந்தாலும் அமைதியாக இருந்தேன். அவரிடம் இருந்து தப்பிக்க திட்டமிட்டேன். அதன்படி நான் இங்கிலாந்துக்கு தப்பி வந்து என் தாயாருடன் அடைக்கலமாகி விட்டேன்'' என்றார்.
இவரது தொல்லை தாங்காமல் இவருடைய 6வது மனைவி கடந்த வருடம் அரண்மனையில் இருந்து தப்பிச் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.