Published:Updated:

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் மேற்கொண்ட இரண்டு துணிச்சலான செயல்கள்!

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் மேற்கொண்ட இரண்டு துணிச்சலான செயல்கள்!
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் மேற்கொண்ட இரண்டு துணிச்சலான செயல்கள்!

பால்கோட் தாக்குதலைத் தொடர்ந்து, நேற்று காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த தாக்குதலில், இந்திய விமானப்படையின் MiG 21 ரக விமானம் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்துள்ளது. அதில்  இருந்த அபிநந்தன் என்ற இந்திய விமானியை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பிடித்துவைத்துள்ளனர்.  இந்தத் தகவலை இந்திய அரசும் உறுதிசெய்துள்ளது. 

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் மேற்கொண்ட இரண்டு துணிச்சலான செயல்கள்!

அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் உள்ளதாகப் பல வீடியோக்கள், பாகிஸ்தானின் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று முதல் வெளியிடப்பட்டுவருகிறது. பாகிஸ்தானில் இருக்கும் இந்திய விமானியை மீட்கும் நடவடிக்கைகளில் தற்போது இந்தியா ஈடுபட்டுள்ளது. அபிநந்தன் பாகிஸ்தான் பகுதியில் விழுந்தபோது, அவரை நேரில் பார்த்தவர் பாகிஸ்தானின் டான் (Dawn)  என்ற ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார். முகமது ரஸ்ஸாக் சௌத்ரி (Mohammad Razzaq Chaudhry) என்ற இளைஞர் முஸாஃபராபாத்தில் உள்ள ஹோர்ரா என்ற கிராமத்தில் வசித்துவருகிறார். இந்தக் கிராமம், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து 7 கி.மீ தொலைவில் (பாகிஸ்தானில்) உள்ளது. 

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் மேற்கொண்ட இரண்டு துணிச்சலான செயல்கள்!

நேற்று நடந்த சம்பவங்கள் பற்றி ரஸ்ஸாக் கூறுகையில், ‘ நேற்று காலை 8:45 மணியளவில் எங்கள் கிராமப் பகுதியில் பலத்த சத்தத்துடன் குண்டுகள்  வெடித்தன.  அதைக் கேட்டு வானில் ஏதோ தாக்குதல் நடப்பதாக உணர்ந்தேன். பிறகு, நான் வெளியில் வந்து பார்த்தபோது, ஒரு விமானம் வெடித்துச் சிதறியது. அதிலிருந்து நெருப்பு வெளிவரத் தொடங்கியது. பின்னர், விமானத்தில் இருந்து ஒருவர் பாராசூட் மூலம் பறந்துவந்து பத்திரமாகக் கீழே விழுந்தார். 

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் மேற்கொண்ட இரண்டு துணிச்சலான செயல்கள்!

பாராசூட்டை உதறிவிட்டு எழுந்து வந்து, அங்கிருந்த இளைஞர்களிடம் துப்பாக்கியை காட்டி , இது இந்தியாவா பாகிஸ்தானா எனக் கேட்டுள்ளார். கும்பலில் உள்ள ஒரு இளைஞர்,  ’இது இந்தியா’ என மாற்றி பதிலளித்தார். பின்னர், இந்தியாவில் சரியாக இது எந்தப் பகுதி என விமானி கேட்டதற்கு, அதே இளைஞன் நக்கலாகப் பதில் அளித்தார். பிறகு விமானி, ‘என் முதுகெழும்பு உடைந்துள்ளது குடிக்க தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பின்னர்தான், எங்களுக்குத் தெரிந்தது விழுந்தது இந்திய விமானி என்று.  அது அபிநந்தன் என தெரிந்ததும் அந்த இளைஞர்கள் ‘ பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனக் கூறிக்கொண்டு கீழே இருந்த கற்களை எடுத்து அவரை தாக்கத் தொடங்கினர்.

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கும் முன் அபிநந்தன் மேற்கொண்ட இரண்டு துணிச்சலான செயல்கள்!

அவர்களிடமிருந்து தப்பிக்க, விமானி துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டிருக்கிறார்.  யாரும் தன் அருகில் வராத வகையில் தன்னை பாதுகாத்துக்கொண்டார். பிறகு அவர்களிடமிருந்து தப்பித்து ஓடியுள்ளார். அவர்களும் விமானியைத் துரத்தியுள்ளனர். இறுதியாக  ஒரு சிறிய குளத்தின் அருகில் சென்ற விமானி, தன்னிடம் இருந்த ஆவணங்கள், வரைபடங்கள் போன்றவற்றைக் கிழித்துத் தண்ணீரில் மூழ்கடிக்க முயன்றுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள்,  விமானியைச் சுற்றி நிறுகொண்டு அவரின் காலில் அடித்துள்ளனர். சிலர், விமானிமீது மிகவும் மோசமான தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த நேரத்தில்தான் பாகிஸ்தான் ராணுவம் அங்கு வந்து விமானியை அந்க்த கும்பலிடமிருந்து மீட்டுச் சென்றது. ராணுவத்தினர் வரும் வரை அந்தக் கும்பலிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள விமானி கடுமையாகப் போராடியதாக''க் கூறியுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர், விமானி அபிநந்தனைத் தாக்கிய வீடியோவும் அவர்களிடமிருந்து ராணுவத்தினர் வாங்கிக்கொண்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை மீட்டு, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வீடியோவும் நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது.