தற்கொலைப்படை தாக்குதல்கள் ஏற்படுத்திய அதிர்விலிருந்து மெதுவாக மீள்கிறது இலங்கை. ‘நாடு இப்போது பாதுகாப்பாக இருக்கிறது’ என்று அறிவித்திருக்கிறார், அதிபர் சிறிசேனா. விசாரணையிலும் பாதி தூரத்தை அடைந்து விட்டதாகச் சொல்கிறார்கள் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள். இலங்கையின் இன்றைய நிலைக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இறுதி யுத்தத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கை மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டரிடம் பேசினோம்.

‘‘ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, இலங்கையை ஏன் தேர்வு செய்தது என்று நினைக்கிறீர்கள்?”

‘‘இலங்கையை ஐ.எஸ்.ஐ.எஸ் தேர்வு செய்தமைக்குப் பல காரணங்கள் உள்ளன. இலங்கையில் 2012-ல் தோற்றம் பெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்குச் சிங்கள அதிகார வர்க்கத்தினரும் சில முஸ்லிம் அரசியல் தலைமைகளும் துணை நிற்கிறார்கள். இந்த ஆதரவைப் பயன்படுத்தி இலங்கையில் அந்த அமைப்பு பலமடைந்துள்ளது. சிரியா எல்லையில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ், தெற்காசி யாவில் அரச ஆதரவுகொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை அரவணைத்து, இலங்கையில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. கூடவே, இலங்கை அரசியலில் காணப்படும் அதிகார முரண்பாடுகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தன. இன்னொரு புறம், இலங்கையின் புலனாய்வுக் கட்டமைப்பு முழுமையாக அரசியல் மயமாகிக் கிடக்கிறது. இலங்கை அரசாங்கம் தனது ஆட்சியைத் தக்கவைப்பதற்கும் தமிழ் மக்களைக் கண்காணிப்பதற்குமே புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் புலனாய்வு அமைப்புகள் கவனம் செலுத்தவில்லை. இலங்கை அரசின் இந்தப் போக்கு, தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை மேலும் எளிதாக்கியது.”

‘‘தாக்குதல் குறித்து இந்திய உளவுத்துறை இலங்கைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தும், அதைத் தடுப்பதற்கு இலங்கை அரசு தவறியது ஏன்?”

‘‘சிறிசேனா - ரணில் முரண்பாடும் இலங்கை பாதுகாப்புக் கட்டமைப்பின் திறமையின்மையும் மட்டுமே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதன் பின்னணியில் ஆழமான வரலாற்று அரசியல் காரணங்களும் இருக்கின்றன. இலங்கையின் முதல் கலவரமே 1983-ல் சிங்கள பெளத்தப் பேரினவாதிகளால், கிறிஸ்தவர்களுக்கு எதிராகத்தான் நடத்தப்பட்டது. அதுவும் இதுபோன்ற ஈஸ்டர் ஞாயிறு தினத்தில்தான் நடந்தது. அப்போதிருந்தே கிறிஸ்துவ தமிழர்களே அதிக அளவு குறி வைக்கப்படுகிறார்கள். இப்படி கிறிஸ்தவர்கள்... அதிலும் தமிழர்களே அதிகமாகக் கொல்லப்படுவதை இலங்கை அரசு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. அலட்சியமாக இருந்தது. இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. கிடைத்த தகவல்களைப் பொறுப்புடன் கையாண்டிருந்தால், இந்த அவலத்தைத் தடுத்திருக்க முடியும். இனப் படுகொலை மற்றும் போர்க்குற்றங்களிலிருந்து அரசையும் ராணுவத்தையும் பாதுகாப்பதற்கு இலங்கையை ஒரு பதற்றத்தோடு வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் இலங்கை அரசுக்கு இருக்கிறது. இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தத் தவறியமைக்கு இதுவும் ஒரு மறைமுகக் காரணம். இதுபோக, இறுதி யுத்தத்தில் சொந்த நாட்டு மக்களையே கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த இலங்கை அரசு, மக்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது.”

‘‘இந்தத் தாக்குதல்கள் தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்?”

‘‘முள்ளிவாய்க்காலில் சிங்கள ராணுவத்தின்மீது படிந்த இன அழிப்பு ரத்தக்கறையை, இப்போது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட தமிழர்களின் ரத்தத்தால் கழுவுவது போன்ற நுட்பமான அரசியலைச் செய்கிறது இலங்கை அரசு. ஐ.எஸ் பயங்கரவாதம் மூலம் நடந்த இந்தப் படுகொலை, லட்சக்கணக்கில் தமிழர்களைக் கொன்ற இலங்கை அரச பயங்கரவாதத்தை மூடி மறைக்கிறது. ஐ.எஸ் மட்டும் தேவாலயங்களைத் தாக்கவில்லை, சிங்கள ராணுவமும் இதற்கு முன்பு இந்த வேலையைச் செய்துள்ளது. ஆனால், சிங்கள பெளத்த பேரினவாத ராணுவம், இப்போது இலங்கையையும் தேவாலயங்களையும் காக்கும் புனிதராகப் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. ‘ராணுவ அதிகாரிகள்மீது போர்க்குற்ற விசாரணை என்று பேசி புலனாய்வுக் கட்டமைப்பு பலவீனப்படுத்தப்பட்டது. அதனால், இப்படியான தாக்குதல் நடந்துவிட்டது’ என்று அதிபர் சிறிசேனா போர்க்குற்ற விசாரணையுடன் இந்தத் தாக்குதலை இணைத்துப் பேசுகிறார். அதுமட்டு மன்றி, தாக்குதல் நடந்த தென் இலங்கைப் பகுதியை விட்டுவிட்டு, தமிழர் பகுதிகளில் ராணுவம் மேலும் குவிக்கப்படுகிறது. தேடுதல் வேட்டை நடக்கிறது. கண்மூடித்தனமாகக் கைதுகள் நடக்கின்றன. உலகத் தமிழர்கள், இலங்கை அரசால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரும் நிகழ்ச்சி நிரலை மீண்டும் முன்னுக்குக் கொண்டுவர வேண்டும்.”

‘‘ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாட்டை எவ்வாறு பார்க்கிறீர்கள்?”

‘‘ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் பயங்கரவாத நடவடிக் கைகள் கிறிஸ்தவர்களை மட்டும் கொல்லவில்லை. இலங்கையில் வட கிழக்கில் வாழும் முஸ்லிம்கள், தமிழர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி யுள்ளது. அவர்களால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர் களைவிடவும், அவர்களின் பயங்கரவாதத்தின் எதிர்விளைவாகக் கொல்லப்பட்ட, அகதிகளாக்கப்பட்ட, சிறை சித்ரவதைக்கு உள்ளான முஸ்லிம்களே அதிகம். ஐ.எஸ் அமைப்பு முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கருதிக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்த அமைப்பு உலகம் முழுக்க வாழும் முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மனித குலத்துக் கும் தீமை விளைவித்துக்கொண்டிருக்கிறது.’’

‘‘தற்போது நடைபெற்ற தாக்குதல்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் அணுகுமுறைகளோடு ஒப்பிட்டு இலங்கை அரசியல்வாதிகள் சிலர் கருத்துக் கூறி வருகிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

‘‘விடுதலைப் புலிகள் ஒரு விடுதலை இயக்கம். அது தமிழீழ மக்களின் கண்ணியமிக்க ராணுவம். ஐ.எஸ் அமைப்பு இதற்கு நேர் எதிரானது. இரண்டையும் ஒப்பிட்டுப் பேசுவது சிங்களத் தலைவர்களின் வக்கிரத்தையே காட்டுகிறது. புலிகளுக்கு மக்கள் ஒருபோதும் இலக்காக இருந்ததில்லை. புலிகள் சிங்களக் குழந்தைகளையும் கர்ப்பிணிகளையும் கொன்றதில்லை. சிங்களவர்கள் இருக்கும் மருத்துவமனைகளில் குண்டு வீசியதில்லை. சிங்களப் பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்ததில்லை. இதையெல்லாம் தமிழர்களுக்கு எதிராகச் செய்தது இலங்கை ராணுவமே. ஆகவே, அவர்கள் ஒப்பிட்டிருக்க வேண்டியது இலங்கை ராணுவத்தையும் ஐ.எஸ் அமைப்பையுமே. இலங்கை அரசுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதே என் கருத்து.”

‘‘கொழும்பில் வசித்த பாகிஸ்தானியர்களைத் தமிழர் பகுதியான வவுனியாவில் குடியேற்றுவதற்கு இலங்கை அரசு முயற்சி செய்வதாகவும் அதற்குத் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதன் பின்னணி என்ன?”

‘‘அகதியாய் இருப்பதன் வலியை உணர்ந்தவன் நான். ‘அகதிகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது’ என்று சொல்லக் கூடியவர்கள் அல்லர் தமிழர்கள். பத்து லட்சம் தமிழர்கள் தங்களின் பூர்விக மண்ணிலிருந்து அகதிகளாக வெளியேறும் சூழ்நிலையை ஏற்படுத்திய இலங்கை அரசு, பாகிஸ்தானியர்களுக்குத் தஞ்சம் கொடுப்பது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதன் உள்நோக்கத்தை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உணர வேண்டும். கொழும்பிலிருந்து மட்டுமல்ல, சிங்களர்கள் பெரும்பான்மையினராக வாழும் அனைத்து மாகாணங்களில் இருந்தும் பாகிஸ்தானியர்களை விரட்டிவிட்டார்கள். அவர்கள் தமிழர் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். தமிழர்களுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இலங்கை அரசுக்கு பாகிஸ்தான் உதவி செய்தது. தமிழர்களைக் கொன்றழிப்பதற்காக, பாகிஸ்தானிடம் இருந்து உதவியைப் பெற்றவர்கள் சிங்களப் பிரதேசத்தில் பாகிஸ்தானியர்களுக்கு இடம் கொடுக்க வேண்டியதுதானே...? தங்கள் இடத்தை யாருக்கும் கொடுப்பதற்கும் மறுப்பதற்கும் முடிவெடுக்கும் உரிமை தமிழர்களுக்கு இல்லை என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. எங்கள் மண்ணில் செய்யப்படும் இந்தக் குடியேற்றம், இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக நடத்திவரும் இன அழிப்பின் ஒரு பகுதியே. அகதிகள் மீதான அக்கறையில் இலங்கை அரசு செயல்படவில்லை என்பதை உணர்ந்தே, தமிழ் மக்கள் பாகிஸ்தானியர் குடியேற்றத்தை எதிர்க்கிறார்கள்.”

– சக்திவேல்
படம்: சொ.பாலசுப்ரமணியன்