Published:Updated:

சீனாவில் அதிகளவில் முதலீடு செய்ய இந்தியர்களுக்கு பிரதமர் கெகியாங் அழைப்பு

புதுடெல்லி: இந்தியாவிலுள்ள தொழிலதிபர்கள் சீனாவில் அதிக அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என டெல்லியில் நடந்த கூட்டத்தில் சீன பிரதமர் லீ கெகியாங் வேண்டுகோள் விடுத்தார்.

##~~##
டெல்லியில், இந்திய தொழிலக கூட்டமைப்பு கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் சீன பிரதமர் லீ கெகியாங் பேசும்போது, ''உலக பொருளாதாரத்தில் இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகின் மிகப் பெரிய சந்தையாக இந்தியா, சீனா உள்ளது. தெற்காசிய வளர்ச்சிக்கு இருநாடுகளிலும் அமைதி நிலவ வேண்டியது அவசியம். இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்ற சீனா தயாராக உள்ளது.
இந்தியாவில் உற்பாத்தியாகும் பொருட்களை சீனாவில் வியாபாரம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்திய வர்த்தகத்தை ஊக்குவிக்க சீன வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய தொழில் அதிபர்கள் சீனாவில் அதிக அளவு முதலீட்டில் தொழில் தொடங்கவும் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.