Published:Updated:

பெண்களும் இனி மேலாடை அணியாமல் நடமாடலாம்

பெண்களும் இனி மேலாடை அணியாமல் நடமாடலாம்
பெண்களும் இனி மேலாடை அணியாமல் நடமாடலாம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இனி பெண்களும் மேலாடை அணியாமல் நடமாடலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.

இதுவரை, அமெரிக்காவின் நியூயார்க்கில் மேலாடை அணியாமல் சுற்றித் திரிந்த பெண்களை போலீசார் கைது செய்து அபராதம் விதித்து வந்தனர். இருந்தபோதும், இவற்றையெல்லாம் மீறி வருடந்தோறும் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று அமெரிக்காவின் பல நகரங்களில் மேலாடை அணியாத பல பெண்கள் பேரணி நடத்தி புரட்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் மேலாடை அணியாமல் சுற்றுப்பயணம் செய்து வரும் ஹோல்லி வேன் வோஸ்ட் என்பவர் நியூயார்க் நகரில் 'சுதந்திரமாக' வலம் வந்தபோது போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் ஹோல்லி வேன் வோஸ்ட் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், '1992 ஆம் ஆண்டு நடந்த வழக்கு ஒன்றில், 'பெண்கள் மேலாடை அணியாமல் செல்வதை குற்றமாக கருத முடியாது' என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எனது கட்சிக்காரர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

##~~##
இதைக் கேட்ட, நீதிபதி 'முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் மேலாடை இல்லாமல் பெண்கள் பொது இடங்களில் நடமாடுவதை குற்றம் என்று கூற முடியாது. எனவே, ஹோல்லி வேன் வோஸ்ட்டை விடுதலை செய்து உத்தரவிடுகிறேன்' என தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, நியூயார்க் நகரில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும், போலீஸ் தலைமையகத்திலிருந்து நேற்று ஓர் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில்,'பெண்கள் மேலாடை இன்றி திரிவது குற்றம் அல்ல. எனவே, இந்த குற்றப்பிரிவின் கீழ் யாரையும் கைது செய்ய வேண்டாம்' என தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
இதைத் தொடர்ந்து தற்போது, நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் நடமாடலாம். அப்படி நடமாடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.