Published:Updated:

எலிசபெத் டெய்லர் காலமானார்!

லாஸ் ஏஞ்செல்ஸ், மார்ச் 23,2011

பழம்பெரும் ஹாலிவுட் நடிகையும், 20-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரமுமான எலிசபெத் டெய்லர் காலமானார். அவருக்கு வயது 79.

எலிசபெத் டெய்லர் காலமானார்!

கடந்த சில ஆண்டுகலாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இரு மாதங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

எலிசபெத் டெய்லரின் உடல்நிலை மோசமாகி வந்த நிலையில், புதன்கிழமை அவரது உயிரி பிரிந்தது.

கனவுக் கன்னி...

ஹாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு 1950, 60களில் கனவுக்கன்னியாக வலம் வந்த எலிசபெத் டெய்லர்,  தனது அழகாலும் ஆற்றலாலும் வெகுவாக வசீகரித்தவர்.

இங்கிலாந்து வாழ் அமெரிக்க பெற்றோருக்கு மகளாகப் பிறந்த இவர், தனது 12-வது வயதில் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

நேஷனல் வெல்வெட், கிளியோபாட்ரா, ஹூ இஸ் அப்ரெய்ட் ஒப் வர்ஜீனியா ஊல்ப் போன்ற படங்களின் மூலம் புகழின் உச்சத்தைத் தொட்டவர்.

ரெயின் ட்ரீ கௌண்ட்டி, கேட் ஆன் அ ஹாட் டின் ரூப், சடன்லி லாஸ்ட் சம்மர் ஆகிய மூன்று படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டன.  பட்டர்பீல்ட் 8, ஹூ இஸ் அப்ரெய்ட் ஒப் வர்ஜீனியா ஊல்ப் ஆகிய இரு படங்கள் ஆஸ்கரைப் பெற்றுத் தந்தன.

திகைக்க வைக்கும் திருமணங்கள்...

நடிப்பு, அழகைத் தாண்டி தனது திகைக்க வைக்கும் திருமணங்களாலும் உலகப் பிரபலம் அடைந்தார். எலிசபெத் எட்டு முறை திருமணம் செய்துகொண்டவர். பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனை இரு முறை திருமணம் செய்து கொண்டு, பின்னர் அவரை இரு முறை விவாகரத்தும் செய்தது கவனிக்கத்தக்கது.

சினிமாவைக் கடந்து சமூக நலனில் அக்கறை கொண்ட இவர், 'எய்ட்ஸ்' நோய்க்கு எதிரான பிரசாரம் மற்றும் அந்நோய் பாதிக்கப்பட்டோருக்கான உதவிகள் பலவற்றை வழங்கி மக்கள் மத்தியில் கூடுதலாக நற்பெயரையும் ஈட்டியவர்.

அடுத்த கட்டுரைக்கு