Published:Updated:

4 ஆண்டுக்கு பிறகு ராணுவ முகாம்களை குறைக்கிறது இலங்கை அரசு

4 ஆண்டுக்கு பிறகு ராணுவ முகாம்களை குறைக்கிறது இலங்கை அரசு
4 ஆண்டுக்கு பிறகு ராணுவ முகாம்களை குறைக்கிறது இலங்கை அரசு
4 ஆண்டுக்கு பிறகு ராணுவ முகாம்களை குறைக்கிறது இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள ராணுவ முகாம்களின் எண்ணிக்கையை குறைக்கப் போவதாக அந்நாட்டு ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு போருக்குப் பிறகு தமிழர் பகுதிகளில் இலங்கை அரசு ராணுவ முகாம்களை அமைத்தது. போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் சர்வதேச நெருக்கடிக்குப் பணிந்து ராணுவ முகாம்களை குறைக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு தொடங்கியிருக்கிறது.

இது தொடர்பாக கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய  இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா, யாழ்ப்பாணத்திலுள்ள 17 முகாம்களில் 14 முகாம்களை மூடப் போவதாக கூறினார்.மீதமுள்ள 3 முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்த ஜெயசூர்யா, திரும்பப் பெறப்படும் 14 முகாம்களும் பலாலி கண்டோன்மெண்ட்டிற்கு மாற்றப்படும் என்றார்.

##~~##
ராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்த அவர், அதேநேரத்தில், பாதுகாப்பு காரணங்களால் நிலங்களை ஒப்படைக்கும் பணி கடினமாக அமையும் என்றார்.