ஆஸ்திரியா நாட்டின் பிரதான தொழிலே உளவு பார்ப்பதுதான். உளவாளிகளின் சொர்க்க பூமி என்றும் அந்த நாட்டைச் சொல்வார்கள். எந்த நாட்டு உளவாளியாக இருந்தாலும் சரி, ஆஸ்திரியா-வுக்குள் சுதந்திரமாக உலவ முடியும். அந்த அளவுக்கு உளவாளிகளுக்கு உதவுகின்றன அங்கிருக்கும் உளவு அமைப்புகள். அப்படிப்பட்ட நாட்டில் ஒரு ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கி ஆட்சியை இழந்திருக்கிறது, வலதுசாரிக் கூட்டணி.

கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகை நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ சமீபத்தில் வெளிவந்து, ஆஸ்திரிய நாட்டு அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. அந்த வீடியோவில், ‘நான் ரஷ்ய தொழிலதிபருக்கு நெருக்கமானவள்’ என்று சொல்லி அறிமுகமாகும் ஒரு பெண்ணிடம், ‘எனக்கு வெற்றிபெற உதவி னால் அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுத் தருவேன்’ என்று பேரம் பேசி இருக்கிறார், ஆஸ்திரியாவின் துணை பிரதமர் ஹெய்ன்ஸ் கிறிஸ்டியன் ஸ்ட்ராஷ்.

அந்த வீடியோ வெளிவந்து சர்ச்சை கிளம்பிய பிறகு, ‘ஓர் அழகான பெண்ணை ஈர்க்க, குடி போதையில் உளறினேன்’ என்று கூறிச் சமாளித்தார் ஹெய்ன்ஸ். ஆனாலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், அவர் பதவி விலகினார். ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்தப் பிரச்னை வெடித்ததால், வலதுசாரிகள் சங்கடத்தில் நெளிந்தனர். நிலைமையைச் சமாளிக்க, பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரிய அதிபர் அலெக்ஸாண்டர் வான் டெர் பெலென்.

ஆனால், ஆஸ்திரிய மக்கள் இந்த ரகசியச் செயலைக் கண்டு மலைக்கவில்லை. ஏனெனில், உளவு பார்ப்பதுதான் அங்கு சர்வசாதாரண மாயிற்றே? உலகின் உளவு மையமாக ஆஸ்திரியா மாறியதற்கு முக்கியக் காரணம் அதன் புவி அமைப்பு. ஐரோப்பியக் கண்டத்தின் இதயத்தில் இருக்கும் ஆஸ்திரியா, பனிப்போர் காலத்தில் ரஷ்யாவின் இரும்புத்திரைக்கு மிக அருகிலிருந்த நாடு. கிழக்கும் மேற்கும் புவி அரசியலால் இரண்டாகப் பிரிந்து கிடந்த போது… ஆஸ்திரியா மட்டும் நடுநிலையுடன் இரு பிரிவுகளுக்கு இடையே பாலமாகச் செயல்பட்டதும் இதற்கு ஒரு காரணம்.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு, பால்கன் நாடுகளை மேற்கு நாடுகள் அணுக வேண்டுமானால், ஆஸ்திரியாதான் ஒரே வாசல். பனிப்போர் காலத்தில், பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் ஆஸ்திரியாவை நான்கு பகுதி களாகத் தங்களுக்குள் பிரித்துக்கொண்டு, ஆதிக்கம் செலுத்தின. பனிப்போருக்குப் பிறகு, இரும்புத்திரை விலகியதால் மேற்கு நாடுகளைக் கண்காணிக்க ரஷ்ய கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கண்ணும் காதுமாக இருந்தது ஆஸ்திரியா. அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, மத்திய கிழக்கு நாடுகளுக்கான ராஜதந்திரங்களைத் தீட்டும் மையமாகவும் அந்த நாடு மாறியது. இதனால், பல நாடுகள் தங்களின் உளவுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், எதிரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தவும், ராஜாங்கத் திட்டங்களைத் தீட்டவும் ஆஸ்திரியாவைத் தேர்வுசெய்தன.

இன்னொரு பக்கம் ஐ.நா பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் தலைமையகம், அணு ஆயுதப்பரவலைத் தடுக்கும் சர்வதேச அணு ஆற்றல் முகமை, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு, ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு நிறுவனம் என்று பல பன்னாட்டு அமைப்புகள் ஆஸ்திரியாவில் செயல்படு கின்றன. இதனால், பல்வேறு நாடுகளின் ராஜதந்திரிகள், தூதர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் வருகை இங்கு சர்வ சாதாரணம். இதுவும் இங்கு உளவு அமைப்புகள் அதிகரிக்க முக்கியமான ஒரு காரணம். தற்போது, இங்கு உளவாளிகளை அதிகம் அனுப்புவதில் அமெரிக்காவும் ரஷ்யாவும் முன்னணியில் இருக்கின்றன.

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் உளவாளியாக இருந்தால்… யூகோஸ் லேவியா, ஹங்கேரி, செக்கோஸ்லோ வாக்கியா, போலந்து எனப் பல நாடுகளில் நினைத்ததைச் சாதிக்கலாம். இன்று சுமார் ஏழாயிரம் வெளிநாட்டு உளவாளிகள் வியன்னாவில் தங்கியிருக்கின்றனர். இது அந்த நாட்டு அரசுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், எதிர்ப்பு தெரிவிக்காது; எதுவும் செய்யாது. ஏனெனில், உளவுத் தகவல்களுக்காக அளவில்லாத பணம் ஆஸ்திரியாவில் கொட்டப்படுகிறது. இதனால், அந்த நாட்டுக்குக் கொள்ளை லாபம் கிடைக்கிறது.

“உளவு பார்ப்பது எங்களின் கலாசாரமாக மாறிவிட்டது. ஆஸ்திரிய சமூகம் ரகசியங் களால் கட்டமைக்கப்பட்டது. ரகசியங் கள்தான் நாட்டின் மூலதனம். ரகசியங் கள்தான் மக்களை வாழ்விக்கின்றன” என்கிறார்கள் ஆஸ்திரிய நாட்டு மக்கள்.

தற்போது நடந்து முடிந்திருக்கும் இந்த ஸ்டிங் ஆபரேஷனால், அந்த நாட்டில் சட்டங்கள் மாறப் போவதில்லை. உளவுத்தொழிலுக்குப் பங்கம் வரும் எந்தச் செயலையும் ஆஸ்திரிய அரசு செய்யாது. ஏனெனில், வல்லரசுகளைத் தன்வசம் தக்கவைக்க ஆஸ்திரியாவுக்கு இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு உளவுத்தொழில்தான்!

- கே.ராஜு