Published:Updated:

ஹை ஹீல்ஸ் காலணிக்கு நோ... திரண்டெழுந்த ஜப்பான் பெண்கள்! - #குடூ

ஹை ஹீல்ஸ் காலணிக்கு நோ... திரண்டெழுந்த ஜப்பான் பெண்கள்! - #குடூ
பிரீமியம் ஸ்டோரி
ஹை ஹீல்ஸ் காலணிக்கு நோ... திரண்டெழுந்த ஜப்பான் பெண்கள்! - #குடூ

ஹை ஹீல்ஸ் காலணிக்கு நோ... திரண்டெழுந்த ஜப்பான் பெண்கள்! - #குடூ

ஹை ஹீல்ஸ் காலணிக்கு நோ... திரண்டெழுந்த ஜப்பான் பெண்கள்! - #குடூ

ஹை ஹீல்ஸ் காலணிக்கு நோ... திரண்டெழுந்த ஜப்பான் பெண்கள்! - #குடூ

Published:Updated:
ஹை ஹீல்ஸ் காலணிக்கு நோ... திரண்டெழுந்த ஜப்பான் பெண்கள்! - #குடூ
பிரீமியம் ஸ்டோரி
ஹை ஹீல்ஸ் காலணிக்கு நோ... திரண்டெழுந்த ஜப்பான் பெண்கள்! - #குடூ

மீ டூ (#MeToo) இயக்கம் மற்றும் அஸ்டூ (#UsToo) அறிக்கை ஆகியவை உலகை உலுக்கியதைப்போல இப்போது, ‘குடூ’ (#KuToo) இயக்கம் ஜப்பான் நாட்டைப் புரட்டிப்போட்டுள்ளது. ‘பணிக்குச் செல்லும் பெண்கள், ஹை ஹீல்ஸ் ஷூ அணிய வேண்டும்’ என்பது கட்டாய உடை நெறியாகத் திணிக்கப்பட்டதை எதிர்த்த ஜப்பானியப் பெண்களின் போராட்டம்தான் இந்த குடூ!

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை அம்பலப்படுத்திய மீடூ இயக்கம், மேற்கு நாடுகளில் தொடங்கி, தென்கொரியா வரைத் தீயாகப் பரவியபோதும்… ஆணாதிக்கச் சிந்தனையில் ஊறிக்கிடக்கும் ஜப்பானின் கரையைக்கூட அது நெருங்கவில்லை. ஆனால், எவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும்… அநீதிக்கு எதிராகப் பெண்கள் கொதித்தெழுவார்கள் என்பதற்குச் சாட்சிதான், குடூ இயக்கம்.

ஜப்பான் நாட்டின் ஓர் உணவகம், அங்கு பணிபுரியும் பெண்கள் கட்டாயம் ஹை ஹீல்ஸ் அணிய வேண்டும் என உத்தரவிட்டது. அதைப் ‘பாலின பாகுபாடு’ என்று கண்டித்த நடிகை யூமி இஷிகாவா, அந்த உத்தரவுக்கு எதிராக, குடூ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். ஜப்பானிய மொழியில் ‘குட்ஸு’ (kutsu) என்றால் காலணி. ‘குட்ஸூ’ (kutsuu) என்றால் வலி. இந்த இரண்டு சொற்களிலும் உள்ள முதல் எழுத்தைவைத்து, உருவாக் கப்பட்ட கு டூ ஹேஷ்டேக் வைரலாகிவிட்டது. ஹை ஹீல்ஸ் அணிவதால் கால் விரல்களில் ஏற்பட்ட வீக்கம், காயம் உள்ளிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் குவிந்தன.

ஹை ஹீல்ஸ் காலணிக்கு நோ... திரண்டெழுந்த ஜப்பான் பெண்கள்! - #குடூ

தனக்குக் கிடைத்த ஆதரவால் உற்சாகமடைந்த யூமி, ‘பணிபுரியும் பெண்கள் கட்டாயம் ஹை ஹீல்ஸ் அணிய வேண்டும் என்ற உடை நெறியைத் தடைசெய்ய ஒரு சட்டம் இயற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையுடன், தொழிலாளர் துறை அமைச்சர் டாகுமி நெமோடோவிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் 19,000 பெண்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஆனால், ‘பணிக்கு உடைநெறி அவசியம்’ என்று அந்தக் கோரிக்கையை நிராகரித்தார் டாகுமி.

இதன் தொடர்ச்சியாக, ‘ஆணாதிக்கச் சமுதாயத்திலிருந்து எதை எதிர்பார்க்க முடியும்’ என்ற கேள்வியோடு போராட்டக் காரப் பெண்கள் குமுறியுள்ளனர். முன்பு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ‘பெண்கள் அதிகக் குழந்தைகள் பெற வேண்டும். திருமணம் செய்யாமல் தனியாக வாழ விரும்பும் பெண்கள் சமுதாயத்துக்குச் சுமை’ என்று சொன்ன கருத்தை இப்போது நினைவுபடுத்துகிறார்கள். ‘மருத்துவப் படிப்பில் பெண்கள் சேர்ந்துவிடக் கூடாது’ என்பதற்காக, ஒரு மருத்துவப் பல்கலைக் கழகம் நுழைவுத்தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டையும் இப்போது நினைவுபடுத்து கிறார்கள். கடந்த 2016-ம் ஆண்டில், ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் டொமோமி இனாடா, அமெரிக்க விமானத்தில் ஏறும்போதுகூட ஹீல்ஸ் அணியவேண்டியது கடமை என்று அவருக்குச் சொல்லப்பட்டது. இப்படியாகப் பாலின சமத்துவத்தில் ஜி-7 நாடுகளில் கடைசி இடத்திலிருக் கிறது ஜப்பான்.

ஹை ஹீல்ஸ் காலணிக்கு நோ... திரண்டெழுந்த ஜப்பான் பெண்கள்! - #குடூ

ஹை ஹீல்ஸுக்கு எதிராகப் பெண்கள் குரல் கொடுப்பது புதிதல்ல. கடந்த 2015-ம் ஆண்டில் பிரிட்டன் நாட்டில், ஒரு பெண் பணிக்குச் சேர்ந்த முதல்நாள் அன்று ‘ஹை ஹீல்ஸ் அணிந்து பணிக்கு வரவில்லை’ என்று குற்றம்சாட்டப்பட்டு வேலை யிலிருந்து நீக்கப்பட்டார். அதைக் கண்டித்த நடிகை நிகோலா தோர், பணியிடக் கொள்கைகளில் மாற்றம் வேண்டி அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவருக்கு ஆதரவாக, 1,50,000 பேர் கடிதம் எழுதினர். ஆனால், பிரிட்டன் அரசு செவிசாய்க்கவில்லை.

கடந்த 2015-ம் ஆண்டில் கேன்ஸ் திரைப்பட விழாவில், ஹை ஹீல்ஸ் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டதைக் கண்டித்த நடிகை ஜூலியா ராபர்ட்ஸ், 2016-ம் ஆண்டில் நடந்த விழாவுக்கு வெறும் காலுடன் வந்து தன் எதிர்ப் பைக் காட்டினார். பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் பெண்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்தாலும்… ஹை ஹீல்ஸ் குறித்த சர்ச்சைகள் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஹை ஹீல்ஸ் காலணிக்கு நோ... திரண்டெழுந்த ஜப்பான் பெண்கள்! - #குடூ

ஹை ஹீல்ஸ், கம்பீரத்தையும் கவர்ச்சியையும் தருகிறது என்கிறார்கள் ஒரு சாரார். அது, உடலுக்குத் தீங்கு என்கிறார்கள், மருத்துவர்கள். கடந்த 1873-ம் ஆண்டில் ராணுவ வீரர்கள், ஹீல்ஸ் பூட் அணிவதால் ஏற்படும் சங்கடங்களைத் தெரிவித்தனர். கடந்த 1920-ம் ஆண்டில், ‘1.5 அங்குல உயரத்துக்கு மேல் ஹீல்ஸ் உள்ள காலணிகளை உற்பத்தி செய்யத் தடை விதிக்க வேண்டும்’ என்றது ‘மசாசூஸட்ஸ் மருத்துவ சங்கம்’. இவற்றின் நீட்சிதான், ஜப்பானில் நடக்கும் தற்போதைய போராட்டம். ‘இதைப் பெண்களின் பிரச்னையாகப் பார்க்கக்கூடாது; சமுதாயப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும்’ என்கிறார் யூமி.

பழைமையான பாரம்பர்யத்தில் ஊறிப்போன ஓர் ஆணாதிக்க சமுதாயத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் தீர்வு கிடைத்துவிடுமா என்ன? ஆனாலும், மனம் தளராமல் போராடும் ஜப்பானியப் பெண்களை வாழ்த்துவோம்!

- கே.ராஜு