Published:Updated:

நிவாரண உதவி: இந்தியாவுக்கு ஜப்பான் நன்றி

புதுடெல்லி, மார்ச் 24, 2011

சுனாமியால் பாதித்த ஜப்பானிய மக்களுக்கு அனுதாபங்களை தெரிவித்ததோடு நில்லாமல் 25 ஆயிரம் கம்பளங்களை அனுப்பி வைத்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் பிரதமர் நேட்டோ கான் நன்றி தெரிவித்துள்ளார்.  ##~~##

நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங் பேசிய போது, மனிதாபிமானத்துடன் கூடிய தங்களது ஒத்துழைப்பை தெரிவித்ததற்கு பிரதமர் கான், மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜப்பான் பிரதமர் கான் குறிப்பிட்டுள்ளதாவது:

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியால் ஜப்பானின் டொகோக்கு மாவட்டம் பாதிக்கப்பட்டது. குளிர்ப்பிரதேசமான இப்பகுதியில் உள்ள மக்களுக்கு 25 ஆயிரம் கம்பளங்களை வழங்கி தங்களது அன்பான வார்த்தைகளால் அனுதாபத்தை தெரிவித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில் நீங்கள் பேசிய வார்த்தைகளில் உள்ள அன்பான ஒத்துழைப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

கம்பளங்களை வழங்குவதாக அறிவித்த அதே வேளையில் ஜப்பானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அளிக்க தயாராக உள்ளது என்று தெரிவித்த உங்களது அன்பை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவின் மனமார்ந்த அனுதாபம் தற்போது துயரத்தால் வாடும் அனைத்து மக்களுக்கும் தெரிவிக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  

சுனாமி பாதிப்புக்கு ஆளான பகுதிகளில் உள்ள மக்களை ஒருங்கிணைத்து அனைத்து ஜப்பானிய மக்களையும் இந்த துயரத்தில் இருந்து மீண்டு புத்துணர்ச்சிப் பெற ஜப்பான் அரசு தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஜப்பான் பிரதமர் கான் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு