Published:Updated:

மனைவி ஏ.சி. பயன்படுத்தினால் ஒழுக்கக்கேடுக்கு வழிவகுக்கும்: இஸ்லாமிய மத குரு

மனைவி ஏ.சி. பயன்படுத்தினால் ஒழுக்கக்கேடுக்கு வழிவகுக்கும்: இஸ்லாமிய மத குரு
மனைவி ஏ.சி. பயன்படுத்தினால் ஒழுக்கக்கேடுக்கு வழிவகுக்கும்: இஸ்லாமிய மத குரு

சவுதி: கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மனைவி ஏ.சி. பயன்படுத்தினால், ஒழுக்கக்கேடுக்கு வழிவகுக்கும் என இஸ்லாமிய மத குரு ஒருவர் கூறியுள்ளார்.

##~~##
இன்று உலகிலுள்ள அனைத்து பெண்களும், குறிப்பாக இந்திய பெண்கள் ஆணுக்கு நிகர் என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆண்களால் மட்டும்தான் முடியும் என்றிருந்த வேலையையும் பெண்கள் தைரியமாக செய்து கொண்டிருக்கின்றனர். ஏன்? விண்வெளிக்கே சென்று வந்திருக்கிறார் இந்தியவாழ் அமெரிக்க பெண் ஒருவர்.
இப்படி ஆணுக்கு நிகராக, பெண்கள் வளர்ந்து வரும் சூழலில், சவுதியை சேர்ந்த இஸ்லாமிய மத குரு என தன்னை அறிமுகம் செய்துக்கொள்ளும் ஒருவர், டிவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
டிவிட்டர் இணையதளத்தில், அபுல் அலா என்ற பெயரில் இவர் வெளியிட்டிருக்கும் கருத்தில், ''கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சி.யை பயன்படுத்தக்கூடாது. அப்படி ஏ.சி.யை பயன்படுத்துவதால் அவர்கள் வீட்டில் இருப்பதை பிறர் கவனிக்கக்கூடும். இந்த செயல் ஒழுக்கக்கேடுக்கு வழிவகுக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து, அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.