Published:Updated:

தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்!

தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்!
தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்!
தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்!

கொழும்பு: ரக்பி விளையாட்டில் ராஜபக்சேவின் இளைய மகன், நடுவரை அடித்த விவகாரம் இலங்கையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இலங்கையில் கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற விளையாட்டு ரக்பி. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மூன்று மகன்களும் ரக்பி விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர்கள். இவரது இரண்டாவது மகனான யோஷித ராஜபக்சேதான் இலங்கை ரக்பி அணிக்கு கேப்டன். மூத்த மகன் நமல் ராஜபக்சே, இளைய மகன் ரோஹித ராஜபக்சே இருவரும் கூட‌ ரக்பியில் தீவிர‌ ஆர்வம் கொண்டவர்கள்.

இந்த நிலையில் கடந்த மே 5 ஆம் தேதியன்று, கொழும்பில் உள்ள ஹேவ்லாக்ஸ் மைதானத்தில் 'இண்டர்கிளப் ரக்பி டோர்னமென்ட்' நடந்தது. இதற்கான தகுதிச் சுற்றில் Navy SC அணியும், Police A அணியும் மோதின. வழக்கமாக‌ Navy SC அணிக்கு, ராஜபக்சேவின் இரண்டாவது மகனான யோஷித தான் கேப்டனாக இருப்பார். ஆனால் அன்றைய போட்டிக்கு கடைசி மகன், ரோஹித (22) கேப்டனாக இருந்தார்.

##~~##
போட்டியின் இறுதியில் Police A அணியிடம் Navy SC அணி தோற்றுப்போனது. இதனால் கடுப்பான ரோஹித, போட்டிக்கு நடுவராக இருந்த டிமிட்ரி குணசேகர என்பவர் மீது பாய்ந்தார். அவரது சட்டைக் காலரைப் பிடித்து தாக்குதல் நடத்தினார். அதிர்ச்சி அடைந்த நடுவர் தடுமாறி நின்றார்.
இந்தப் பிரச்னை நடந்தபோது பலர் பார்த்திருந்தபோதும் யாரும் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை. அடிவாங்கிய நடுவர் கூட புகார் கொடுக்க முன்வரவில்லை. ஊடகங்கள் மூலமாக விஷயம் வெளியே வந்திருக்கிறது என்றாலும், "அன்று நடந்த அனைத்தும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது" என ட்விட்டரில் சொல்லியிருக்கிறார் ராஜபக்சேவின் மூத்தமகன் நமல். ஸ்ரீலங்கா ரக்பி ஃபுட்பால் சங்கத்தின் தலைவர் அசங்க சேனவர்த்தன, "தகாத வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கலாம். அடித்திருப்பார் என நான் நம்பவில்லை" என்கிறார்.
அப்பனுக்குப் பிள்ளை தப்பாம பொறந்திருக்கு!