Published:Updated:

மலேசியாவில் 4 தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை!

மலேசியாவில் 4 தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை!
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை!
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை!

கோலாலம்பூர்: கொலை வழக்கில் நான்கு தமிழர்களுக்கு மலேசியா உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பாண்டிங் நகரில் த்மநாபன் (44) என்ற தமிழ் வழக்கறிஞருக்கு சொந்தமான பண்ணைக்கு கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி அங்கு சென்ற அழகுக்கலை பெண் தொழிலதிபர் சோசிலாவதி (47) உள்ளிட்ட 4 பேரை காணவில்லை.

சில நாட்கள் கழித்து நான்கு பேரின் உடல்கள் அந்த பண்ணையில் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பத்மநாபனும், அவருடைய பண்ணை ஆட்களும், தமிழர்களுமான டி.தில்லையழகன் (22), ஆர்.மதன் (23), ஆர்.காத்தவராயன் (33) ஆகியோரும் சேர்ந்து, காணாமல் போன 4 பேரையும் கொலை செய்து எரித்து இருப்பது தெரிய வந்தது.

4 பேரின் உடல் பாகங்களையும் அங்குள்ள நீரோடையில் வீசி உள்ளனர். சோசிலாவதியுடன் கொல்லப்பட்டவர்கள் வங்கி அதிகாரி நூரிஷம் முகமது (38), வழக்கறிஞர் அகமது காமில் அப்துல் கரிம் (32), டிரைவர் கமருதின் ஷம்சுதின் (44) என்பது தெரிய வந்தது. ஒரு நில பேரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்தது.

பத்மநாபன் உள்பட 4 தமிழர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை, மலேசிய உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி அக்தர் தாகிர், பத்மநாபன் உள்பட 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்தார்.

நீதிபதி அளித் தீர்ப்பில், "அழகுக்கலை நிபுணர் சோசிலாவதி விற்ற 2 நிலங்களுக்கு பத்மநாபன் இடைத்தரகர் போல செயல்பட்டார். வாங்குபவரையும், விற்பவரையும் நேரில் சந்திக்க விடாமல் தடுத்து வந்தார். நெருக்குதல் அதிகமானபோது, ஒருதரப்பை கொன்றுவிட்டு தப்பிக்க பத்மநாபன் முடிவு செய்தார்.

மலேசியாவில் 4 தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை!

துரதிருஷ்டவசமாக, அதற்கு சோசிலாவதி பலியாகி விட்டார். அவருடன் கொல்லப்பட்டவர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை. தவறான இடத்தில், தவறான நேரத்தில் இருந்ததற்காக அவர்களும் கொல்லப்பட்டு விட்டனர். சோசிலாவதிக்கு பத்மநாபன் ஒரு காசோலை கொடுத்து இருந்தார்.


கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கிடைக்காததற்காக, மேற்கண்ட 4 பேரையும் தண்டிக்காமல் இருந்துவிட முடியாது. இந்த கொலையை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை குற்றவாளிகள் கூட ஆட்சேபிக்கவில்லை. குற்றவாளிகள், தாங்கள் செய்யும் செயலின் விளைவுகளை நன்கு அறிந்துதான், கொலை செய்யும் ஒரே நோக்கத்துடன் இந்த கொலையை செய்துள்ளனர்" என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

##~~##