Published:Updated:

தீப்பிடித்ததால் விமானம் அவசர தரையிறக்கம்: லண்டன் ஹீத்ரூ விமான நிலைய ரன்வேக்கள் மூடல்

லண்டன்: தீப்பிடித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதா, லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தின் ரன்வேக்கள் அவசரமாக மூடப்பட்டன.

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து ஓஸ்லோவுக்கு இன்று பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. ரன்வேயில் இருந்து மேலே பறந்த சிறிது நேரத்திற்குள் வலதுபக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்தது.

இதனை உணர்ந்த விமானி உடனடியாக விமானத்தை, அதே விமான நிலையத்தின் மற்றொரு ரன்வேயில் அவசரமாக தரையிறக்கினார்.

##~~##
பின்னர் அதில் இருந்த 75 பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டனர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக அங்கு சென்று விமானத்தில் பிடித்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த விமான நிலையத்தின் இரண்டு ரன்வேக்கள் மூடப்பட்டன. இதனால் 23 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.