Published:Updated:

ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல்: 70 பேர் பலி

Vikatan Correspondent
ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல்: 70 பேர் பலி
ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல்: 70 பேர் பலி
ஈராக்கில் வெடிகுண்டு தாக்குதல்: 70 பேர் பலி

பாக்தாத்: ஈராக்கில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

முதலில் ஹபிபியா என்ற இடத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். 35 பேர் காயமடைந்தனர்.

##~~##
அதன் பின்னர் அல் மாலிஃப் பகுதியில் திறந்தவெளி மார்க்கெட்டில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 6 பேர் பலியாயினர்.
இதனையடுத்து மத்திய பாக்தாத்தில் கார்குண்டு வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.