Published:Updated:

தீக்குளித்த பிக்குவின் காட்சியை வீடியோவில் எடுத்த செய்தியாளர் கைது

Vikatan Correspondent
தீக்குளித்த பிக்குவின் காட்சியை வீடியோவில் எடுத்த செய்தியாளர் கைது
தீக்குளித்த பிக்குவின் காட்சியை வீடியோவில் எடுத்த செய்தியாளர் கைது
தீக்குளித்த பிக்குவின் காட்சியை வீடியோவில் எடுத்த செய்தியாளர் கைது

மிருகவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து தகுரு போவத்தே இந்திரரட்ன தேரர் தீக்குளித்த காட்சியை வீடியோவில் பதிவு செய்தி செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பௌர்ணமி தினத்தன்று மிருகவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மதகுரு போவத்தே இந்திரரட்ன தேரர் தொடர்பாக தற்போது விசாரணைகள் தொடங்கியுள்ள நிலையில்,அதன் ஒரு பகுதியாக செய்தியாளர்கள் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

##~~##
தற்கொலை செய்துகொள்ள முன்னர் மதகுரு உள்ளுர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தனது தற்கொலை தொடர்பில் முன்கூட்டியே கருத்து வெளியிட்டிருந்ததாகத் கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து தனியாக விசாரணை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வீடியோ காட்சிகளை பதிவு செய்த செய்தியாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலையை தடுக்காது, அதனை வீடியோ படம் எடுத்ததாக செய்தியாளர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.