Published:Updated:

குடியை மறக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு

Vikatan Correspondent
குடியை மறக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு
குடியை மறக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு
குடியை மறக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு

லண்டன்: குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்க புதிய மருந்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். "மருந்தை உட்கொள்வதின் மூலம் 61 சதவீதம் வரை மது அருந்தும் பழக்கம் கட்டுப்படுத்தப்படும் " என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மது அருந்துபவர்களின் உடல் நிலை மோசமடைவது மட்டுமின்றி, ஏராளமான விபத்துகள் மற்றும் சமூக விரோத செயல்கள் நிகழ்கின்றன.

குடிகளால் ஏற்படும் விபரீதங்களை தடுப்பது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகளின் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின், இதற்கு தீர்வு கிடைத்துள்ளது. இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழு, தன் ஆராய்ச்சியின் பயனாய், புதிய மருந்து ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

##~~##
இது தொடர்பாக விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த மருந்தை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியும். இந்த மருந்து, இங்கிலாந்து அரசின் ஒப்புதலுடன், விற்பனைக்கு வந்துள்ளது. மாத்திரை வடிவில் வெளியிடப்பட்டுள்ள இதற்கு, "செலின்க்ரோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. மோசமான குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர், ஒரு நாளைக்கு, ஒரு மாத்திரை உட்கொள்வதின் மூலம், 61 சதவீதம் வரை மது அருந்துவதற்கான பழக்கத்தில் இருந்து விடுபடலாம். இந்த மருந்தை உட்கொள்வதால், எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது" என்று கூறப்பட்டுள்ளது.