Published:Updated:

இந்தியாவின் தேவைகளுக்காக 13 வது சட்ட திருத்தத்தத்தை அமல்படுத்த முடியாது: கோத்தபய

Vikatan Correspondent

கொழும்பு: இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் 13 வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் எதற்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ள அவர், இலங்கையில் இந்தியாவின் மாதிரியைக் கொண்டுள்ள 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது பொருத்தமானதல்ல என்று கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை அது  கோரக் கூடும். எனவே இதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும்.

##~~##
ஆனால் 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை. இந்தியா அல்லது வேறும் நாடொன்று கோபித்துக் கொள்ளும் என்பதற்காக நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.