Published:Updated:

''அணு ஆயுதம் இருந்ததால்தான் இந்தியா - பாக் போர் 3 முறை தவிர்க்கப்பட்டது'

Vikatan Correspondent
''அணு ஆயுதம் இருந்ததால்தான் இந்தியா - பாக் போர் 3 முறை தவிர்க்கப்பட்டது'
''அணு ஆயுதம் இருந்ததால்தான் இந்தியா - பாக் போர் 3 முறை தவிர்க்கப்பட்டது'

புதுடெல்லி: பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்தியதால்தான், இந்தியாவுடன்  3 முறை ஏற்பட இருந்த போர் தவிர்க்கப்பட்டதாக அந்நாட்டின் பிரபல அணு விஞ்ஞானி டாக்டர் சமர் முபாரக்மந்த் தெரிவித்துள்ளார்.

''அணு ஆயுதம் இருந்ததால்தான் இந்தியா - பாக் போர் 3 முறை தவிர்க்கப்பட்டது'

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், "ஆயுத சோதனை நடத்துவதென்று 1998 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதியன்று நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கமிட்டிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்பட பலரும், இந்தியா நடத்திய அணு ஆயுத சோதனைக்கு பதிலடியாக பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனை நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டம் நடைபெற்ற 3 தினங்களுக்கு முன்னர்தான் இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தி இருந்தது. எனவே பாகிஸ்தானும் தனது அனைத்து நட்பு நாடுகளிடம் தெரிவித்துவிட்டு, 1998  ஆம் ஆண்டு மே 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 5 முறை அணு ஆயுத சோதனையை நடத்தியது.

 பாகிஸ்தானும் அணு ஆயுத வல்லமை பெற்ற நாடாக உருவான பின்னர் இந்தியாவுடனான 3 போர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.அதற்கு ஒரே காரணம் பாகிஸ்தானும் அணு ஆயுத நாடு என்பதை இந்தியா தெரிந்துகொண்டதால்தான்.

1999 ல் கார்கில் விவகாரத்திலும், பின்னர் 2002 ல் பாகிஸ்தானையொட்டிய தனது எல்லையில் இந்தியா தனது துருப்புக்களை குவித்தபோது, அதன்பிறகு 208 ல் நிகழ்ந்த மும்பை தாக்குதலுக்கு பின்னரும் இரு நாடுகளுக்குமிடையே பதட்டம் ஏற்பட்டது. ஆனாலும் பாகிஸ்தான் அணு ஆயுத நாடு என்பதால்தான் போர் ஏற்படவில்லை" என்று கூறியுள்ளார்.