Published:Updated:

66 வயதில் காதல் திருமணம்! - பாதுகாவலரை அரசியாக்கிய தாய்லாந்து மன்னர்

தாய்லாந்து நாட்டின் முன்னாள் மன்னர் பூமிபோல் அடுல்யதேஜ் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் உயிரிழந்தார். இவர் தாய்லாந்தை சுமார் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தார். இவருக்குப் பிறகு அடுத்த மன்னராக புமிபோலின் மகன் மஹா வஜிரா ரலாங்கர்ன் புதிய அரசராக அறிவிக்கப்பட்டார். 

66 வயதில் காதல் திருமணம்! - பாதுகாவலரை அரசியாக்கிய தாய்லாந்து மன்னர்

இறந்த மன்னருக்கு ஒரு வருடமாகத் துக்கம் அனுசரிக்கப்பட்டதால் புதிய மன்னர் முடிசூடும் விழா வரும் சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்லாந்தில் முடிசூட்டு விழா நடைபெறுவதால் மொத்த நாடும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தனது பாதுகாப்புக் குழுவில் துணை கமென்டராகப் பணிபுரியும் சுதிதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களின் திருமணம் நேற்று தாய்லாந்து அரண்மனையில் அந்நாட்டு வழக்கப்படி நடைபெற்றுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

66 வயதில் காதல் திருமணம்! - பாதுகாவலரை அரசியாக்கிய தாய்லாந்து மன்னர்

சுதிதா முதலில் தாய் ஏர்வேஸில் விமானப் பணிப்பெண்ணாக இருந்துள்ளார். அவரைக் கடந்த 2014-ம் ஆண்டு தன் பாதுகாப்புக் குழுவில் பணியில் அமர்த்தினார் வஜிரா ரலாங்கர்ன். அப்போதிலிருந்தே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகப் பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இருந்தும் இதுதொடர்பாக எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் அரண்மனை தரப்பில் இருந்து வெளிவராமல் இருந்தது. ஆனால், இருவரும் தனியாக வெளியில் சுற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டிருந்தன. 

66 வயதில் காதல் திருமணம்! - பாதுகாவலரை அரசியாக்கிய தாய்லாந்து மன்னர்

தற்போது இருவரும் திடீரென திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதன்மூலம் பாதுகாவலரான சுதிதா தற்போது தாய்லாந்து நாட்டின் அரசியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 66 வயதான தாய்லாந்தின் புதிய மன்னர் மஹா வஜிரா ரலாங்கர்னுக்கு இதுவரை மூன்று முறை விவாகரத்து ஆகியுள்ளது என்பதும் 7 குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism