Published:Updated:

``தோனியின் அதே அணுகுமுறை!” - மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது குறித்து சயீத்

``தோனியின் அதே அணுகுமுறை!” - மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது குறித்து சயீத்
``தோனியின் அதே அணுகுமுறை!” - மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது குறித்து சயீத்

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது குறித்து ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான சயீத் அக்பருதீன் பேட்டியளித்துள்ளார். 

``தோனியின் அதே அணுகுமுறை!” - மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது குறித்து சயீத்

பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தன. இந்தத் தீர்மானத்துக்கு அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட நிலையில் சீனா மட்டும் முட்டுக்கட்டைப் போட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

``தோனியின் அதே அணுகுமுறை!” - மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது குறித்து சயீத்

இதன்மூலம் அவரது சொத்துகள் முடக்கப்பட்டது. அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல முடியாது. அவருக்கு யாரும் ஆயுதங்கள் விற்க முடியாது. இந்த விவகாரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பிடிவாதம் பிடித்த, சீனா தற்போது சம்மதம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தொடர் முயற்சியால் இது சாத்தியமானது எனப் பல உலகநாடுகள் இந்தியாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

``தோனியின் அதே அணுகுமுறை!” - மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது குறித்து சயீத்

ஐ.நா -வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான சயீத் அக்பருதீன், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக வாதிட்டுவந்துள்ளார். ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் அறிவிப்புக்குப் பின்னர் `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகத்துக்குப் பேட்டியளித்த சயீத் அக்பருதீன், தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பாணியை பின்பற்றியதாகத் தெரிவித்திருக்கிறார்.

``தோனியின் அதே அணுகுமுறை!” - மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டது குறித்து சயீத்

சயீத் அக்பருதீன், ``ஒரு விஷயத்தை தோனி அணுகுமுறை மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு. நினைத்த காரியத்தை முடிக்க இன்னும் காலம் இருக்கிறது என நம்புவேன். நேரம் முடிந்துவிட்டது என இருந்துவிட மாட்டேன். காலம் கடந்துவிட்டது எனச் சொல்லவே மாட்டேன். முன்னதாகவே விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்” என்றார்.

கிரிக்கெட்டைத் தாண்டி பலருக்கும் தோனி இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்தான். உங்களில் பலருக்கும் அவர் பல விஷயங்களில் பல இக்காட்டன நேரங்களில் இன்ஸ்பிரேஷனாக இருப்பார். உங்களுக்கு தோனியிடம் கிரிக்கெட்டை தாண்டிப் பிடித்த மற்ற விஷயங்கள் குறித்து கமென்ட் செய்யுங்கள் மக்களே...   

Vikatan