Published:Updated:

சைபர் அட்டாக்குக்கு எதிராக வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! -அதிர்ச்சியில் ஹமாஸ்

இஸ்ரேலுக்கும் அதன் அருகே இருக்கும் காஸா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையேயான சண்டை தற்போது தீவிரமடைந்துள்ளது. காஸா பகுதியில் இருந்தே முதலில் 700-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியை நோக்கி அனுப்பப்பட்டதாகவும் அதன் பிறகே எதிர்த் தாக்குதலைத் தொடங்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களால் நான்கு இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்கள் 23 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காஸா பகுதியில் இருந்து வந்த ஏவுகணைகளுக்காக மட்டுமின்றி சைபர் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேல் எதிர்தாக்குதல் நடத்திருக்கிறது. ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் சைபர் தாக்குதலுக்குப் பெரிதாக எதிர் வினையாற்றப்படுவதில்லை. அப்படியே எதிர்த் தாக்குதல் நடத்தப்பட்டாலும் அவை அதேபோல ஒரு சைபர் அட்டாக்காகவே இருக்கும் அல்லது வெறும் கண்டன அறிக்கையோடோ அது முடிந்து விடும். அதைத் தவிர்த்து வேறு எந்தப் பெரிய அளவிலானத் தாக்குதல்களை இதுவரை எந்த நாடும் நடத்தியதில்லை.

சைபர் அட்டாக்குக்கு எதிராக வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! -அதிர்ச்சியில் ஹமாஸ்

ஆனால், தற்போது முதல் முறையாக சைபர் தாக்குதலுக்குப் பதிலாக வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது இஸ்ரேல். மேலும், அதை வெளிப்படையாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறது. அது தொடர்பான தகவல்கள் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக சைபர் அட்டாக்குகளை நடத்தும் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருந்த கட்டடம் ஒன்று வான்வெளித் தாக்குதல் மூலமாகத் தகர்க்கப்பட்டுள்ளது.

சைபர் அட்டாக்குக்கு எதிராக வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! -அதிர்ச்சியில் ஹமாஸ்

` இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய  சைபர் தாக்குதலை நாங்கள் முறியடித்துள்ளோம். நாங்கள் நடத்திய தற்காப்பு நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது. ஹமாஸின் சைபர் தாக்குதல் நடத்துபவர்கள் இருந்த கட்டடத்தைத் தாக்கியுள்ளோம். HamasCyberHQ.exe தற்போது நீக்கப்பட்டு விட்டது' என்று ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையேயான போர் நிறுத்த உடன்படிக்கை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளதால் அந்தப் பகுதியில் பதற்றம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Vikatan