Published:Updated:

காவலில் இருந்த கவுதமாலா சிறுவன் பலி! - விளக்கமளிக்க மறுக்கும் அமெரிக்க அதிகாரிகள்

சத்யா கோபாலன்
காவலில் இருந்த கவுதமாலா சிறுவன் பலி! - விளக்கமளிக்க மறுக்கும் அமெரிக்க அதிகாரிகள்
காவலில் இருந்த கவுதமாலா சிறுவன் பலி! - விளக்கமளிக்க மறுக்கும் அமெரிக்க அதிகாரிகள்

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அனுமதியில்லாமல் அகதிகள் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்தால் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர்களின் குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்படுவார்கள் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

காவலில் இருந்த கவுதமாலா சிறுவன் பலி! - விளக்கமளிக்க மறுக்கும் அமெரிக்க அதிகாரிகள்

இந்நிலையில் அமெரிக்காவுக்குள் நுழைந்த கவுதமாலாவைச் சேர்ந்த சிறுவன், அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகளின் காவலில் இருந்த போது உயிரிழந்துள்ளான். அகதியாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அதிகாரிகளின் காவலில் உயிரிழக்கும் மூன்றாவது சிறுவன் இவன்.

கவுதமாலாவைச் சேர்ந்த டி லியோன் குடிரெஸ் (De Leon Gutierrez) என்ற 16 வயதுச் சிறுவன் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி கவுதமாலாவில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்றுள்ளான். பிறகு ஒரு நாள் அவனது தாய்க்கு போன் செய்து நான் மெக்‌ஸிகோவின் வேர்ஹவுஸில் உள்ளேன். எனக்கு மிகவும் தலைவலியாகவும், காய்ச்சலாகவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளான். அதற்கு அவனை தாய் சமாதானப் படுத்தியுள்ளார். மேலும் தான் மெக்‌ஸிகோ வந்ததிலிருந்து சாப்பிடவில்லை எனவும், குடிக்கத் தண்ணீர் கூடக் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளான். 

காவலில் இருந்த கவுதமாலா சிறுவன் பலி! - விளக்கமளிக்க மறுக்கும் அமெரிக்க அதிகாரிகள்

பிறகு சிறுவன் டி லியோன் மீண்டும் கவுதமாலா செல்வதற்காக ஏப்ரல் 24-ம் தேதி மெக்‌ஸிகோ எல்லைப் பகுதிக்கு வந்தபோது அங்குள்ள குடியேற்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளான். அதன் பிறகு காவலில் வைக்கப்பட்டிருந்த சிறுவன் ஏப்ரல் 30-ம் தேதி அங்கேயே இறந்துள்ளான். சிறுவன் இறந்து பத்து நாள்கள் கடந்த நிலையிலும், அவன் எப்படி உயிரிழந்தான் என்ற விவரத்தை மட்டும் அமெரிக்க அதிகாரிகள் கூற மறுப்பு தெரிவித்துள்ளனர். சிறுவனைக் காவலில் எடுக்கும் போதே காய்ச்சல் இருந்ததாகவும் பிறகு அவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான் என்று மட்டுமே தெரிவித்துள்ளனர். இது உலக அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.