Published:Updated:

இந்திய அணிக்கு ஆஸி. பத்திரிகைகள் புகழாரம்

சிட்னி, ஏப்.4,2011

உலக சாம்பியன் பட்டத்துக்கு இந்திய அணி தகுதி வாய்ந்தது என்று புகழாரம் சூட்டியுள்ள ஆஸ்திரேலிய பத்திரிகைகள், கேப்டன் தோனியின் வழிநடத்தலையும் வெகுவாக பாராட்டியுள்ளது. ##~~##

ஆஸ்திரேலியாவின் முன்னணி நாளிதழ்கள் முதல் பக்கத்தில் இந்திய அணியைப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்திருப்பதாக 'தி ஆஸ்திரேலியன்' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா - இலங்கை ஆகிய இரு ஆசிய அணிகளும் ரசிகர்களுக்கு பரபரப்பான கிரிக்கெட் விருந்தை அளித்ததாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்திய அணித் தலைவர் தோனி வெற்றி கேப்டனாக அந்த நாளிதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

புதிய சக்தி படைத்த இந்திய அணியின் முகமாக தோனி விளங்குவதாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

தோனி நெருக்கடியான நேரத்தில் களமிறங்கி அணியை வழிகாட்டியதாக 'சிட்னி மார்னிங் ஹெரால்டு'

உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு கோப்பையை வென்றதில்லை எனும் வரலாற்றை மாற்றிக் காட்டி இந்தியா புதிய சரித்திரம் படைத்திருப்பதாக அந்நாளிதழ் தெரிவித்துள்ளது.