Published:Updated:

ஆப்கானிஸ்தான்: மதரஸாவில் திடீர் வெடிகுண்டு தாக்குதல்; 16 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

வெடிகுண்டு தாக்குதல் - ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் அய்பக்கிலுள்ள மதரஸாவில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான்: மதரஸாவில் திடீர் வெடிகுண்டு தாக்குதல்; 16 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

ஆப்கானிஸ்தானின் அய்பக்கிலுள்ள மதரஸாவில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Published:Updated:
வெடிகுண்டு தாக்குதல் - ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான அய்பக்கில்(Aybak) இன்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டில் தலிபன்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வந்ததிலிருந்தே பெண்கள்மீது கடுமையான கட்டுப்பாடுகள், அவ்வப்போது பொதுஇடங்களில் வெடிகுண்டு தாக்குதல் எனத் தொடர்ச்சியாக பல சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், தலைநகர் காபூலுக்கு வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அய்பக்கில், இஸ்லாமிய மத பள்ளியான அல் ஜிஹாத் மதரஸாவில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடந்திருக்கிறது.

வெடிகுண்டு தாக்குதல் - ஆப்கானிஸ்தான்
வெடிகுண்டு தாக்குதல் - ஆப்கானிஸ்தான்

இந்த திடீர் தாக்குதலில், 16 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

உயிர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல், இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் குழந்தைகள் மற்றும் சாதாரண மக்கள் என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

வெடிகுண்டு தாக்குதல் - ஆப்கானிஸ்தான்
வெடிகுண்டு தாக்குதல் - ஆப்கானிஸ்தான்

அதேசமயம் குண்டுவெடிப்பை அதிகாரிகள் உறுதிசெய்த போதிலும், உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து துல்லியமான தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபே தாகோர், ``எங்களின் துப்பறியும் மற்றும் பாதுகாப்புப் படைகள், இந்த மன்னிக்க முடியாத குற்றத்தை செய்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களைத் தண்டிக்க வேகமாக செயல்பட்டுவருகின்றன" என்று தெரிவித்திருக்கிறார்.