Published:Updated:

வாட்ஸ்அப்பில் பரவிய அழைப்பிதழ் - ஜெர்மனியில் களைகட்டிய யோகா தினம்! #MyVikatan

நமது நிருபர்
வாட்ஸ்அப்பில் பரவிய அழைப்பிதழ் - ஜெர்மனியில் களைகட்டிய யோகா தினம்!  #MyVikatan
வாட்ஸ்அப்பில் பரவிய அழைப்பிதழ் - ஜெர்மனியில் களைகட்டிய யோகா தினம்! #MyVikatan

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நேற்று ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில், இந்தியத் தூதரகம் சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

வாட்ஸ்அப்பில் பரவிய அழைப்பிதழ் - ஜெர்மனியில் களைகட்டிய யோகா தினம்!  #MyVikatan

கடந்த சில வாரங்களாகவே, வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் வாயிலாக பிராங்பேர்டில் நடக்கவிருந்த யோகா நிகழ்ச்சி பற்றிய அழைப்பிதழ், பலராலும் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது. அதுவே, நிறையப் பேருக்கு இந்நிகழ்ச்சி பற்றித் தெரிய உதவியாக இருந்தது. டெக்னாலஜி முன்னேற்றத்தில் இதுபோன்ற சில நல்ல விஷயங்களும் நடக்கத்தான் செய்கிறது. மாலை 5 மணிக்கு பிராங்பேர்டில் உள்ள 'வால்தெர்-பான்-க்ரோன் பெர்க் பிளாட்ஸ்' என்ற இடத்தில் நிகழ்ச்சி ஆரம்பமானது. உடலுக்கு இதமாக சூரியன் 30 டிகிரி வெப்பத்தில் பிரகாசிக்க, அருகிலேயே குளிர்ந்த நீரூற்று உள்ளத்தைக் குதூகலிக்கச் செய்ய, சூழ்நிலை அற்புதமாக அமைந்திருந்தது.

வாட்ஸ்அப்பில் பரவிய அழைப்பிதழ் - ஜெர்மனியில் களைகட்டிய யோகா தினம்!  #MyVikatan

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், தேவதைகள் போல வெள்ளை உடை மற்றும் இறக்கைகளுடன் ஆண்களும் பெண்களும் மேடையில் நின்றுகொண்டிருந்ததைப் பார்க்க, கொள்ளை அழகு. பிராங்பேர்ட்டின் இந்தியத் தூதரக அதிகாரி, திருமதி பிரதிபா பார்க்கர்  குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.சமஸ்கிருத ஸ்லோகன் ஒலிக்க நிகழ்ச்சி ஆரம்பமானது.

வாட்ஸ்அப்பில் பரவிய அழைப்பிதழ் - ஜெர்மனியில் களைகட்டிய யோகா தினம்!  #MyVikatan

முன்னதாக வந்து டி-ஷர்ட் பெற்றுக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே அறிவித்தபடியால், பலர் சரியான நேரத்திற்கு முன்னதாக வந்து பெற்றுக்கொண்டனர். ஒரு சிலர் தங்களுக்கு வசதியான, தளர்வான உடைகளை அணிந்து வந்திருந்தனர்.சேலையிலும் சிலரைக் காணமுடிந்தது. மேடையில் யோகா நிபுணர்கள் செய்துகாட்ட, வந்திருந்த அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

வாட்ஸ்அப்பில் பரவிய அழைப்பிதழ் - ஜெர்மனியில் களைகட்டிய யோகா தினம்!  #MyVikatan

3 வயது குழந்தையும் யோகா செய்ததைப் பார்த்தபோது, துள்ளிக்குதித்த நம் மனதும் அந்தக் குழந்தையோடு சேர்ந்து யோகா செய்தது. பிராங்பேர்ட்டின் இந்தியத் தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கரும் மற்றவர்களுடன் இணைந்து யோகா செய்தது, அவரின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று. அருகே, ஒருசில ஸ்டால்களில் யோகா சம்பந்தமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கடந்த 15-ம் தேதி, கொலோன் நகரத்திலும் இந்தியத் தூதரகம் சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

புகைப்படங்கள்: இந்தியத் தூதரகம், பிராங்பேர்ட்

செய்தி  : ஜேசு ஞானராஜ்

வாட்ஸ்அப்பில் பரவிய அழைப்பிதழ் - ஜெர்மனியில் களைகட்டிய யோகா தினம்!  #MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ  ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/