Published:Updated:

`அவரைக் கைது செய்ததற்கு நன்றி’ - 93 வயது மூதாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய பேத்தி

வடக்கு இங்கிலாந்தில் உள்ள கிரேட்டர் மான்செஸ்டர் நகரில் வாழும் 93 வயது மூதாட்டியை அந்நகரின் பெரிய போலீஸ் படை சமீபத்தில் கைது செய்துள்ளது. அவர் எந்த தவறுமே செய்யாத நிலையில் காவலர்கள் மூதாட்டியைக் கைது செய்துள்ளனர்.

`அவரைக் கைது செய்ததற்கு நன்றி’ - 93 வயது மூதாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய பேத்தி

இந்தக் கைது தொடர்பாகப் பேசியுள்ள கிரேட்டர் மான்செஸ்டர் போலீஸார், `` சில வாரங்களுக்கு முன்னர் எங்களுக்குச் சற்று வியப்பான ஒரு கோரிக்கை வந்தது. அதில் 93 வயது மூதாட்டியைக் கைது செய்ய வேண்டும் என்றும் அதுவே அவரின் கடைசி ஆசை என்பதால் காவலர்கள் அதை நிறைவேற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜோஷி  பேர்ட் (Josie Birds) என்ற மூதாட்டியின் பேத்தி பாம் ஸ்மித் என்பவர்தான் எங்களுக்கு இந்தக் கோரிக்கையை வைத்தார்.

`அவரைக் கைது செய்ததற்கு நன்றி’ - 93 வயது மூதாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய பேத்தி

பின்னர் அவரின் கோரிக்கையை ஏற்று நாங்கள் மூதாட்டியைக் கைது செய்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒரு நாள் வைத்திருந்தோம். நாங்கள் கைது செய்வதற்காக அவரின் வீட்டுக்குச் சென்றபோது ஜோஷி மிகவும் குஷியாகிவிட்டார். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் இருக்கும் எங்களுக்கு ஒரு மூதாட்டியின் ஆசையை நிறைவேற்ற முடிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் இந்த நாளை என்றும் மறக்கமாட்டார்” எனப் பேசியுள்ளனர். 

`அவரைக் கைது செய்ததற்கு நன்றி’ - 93 வயது மூதாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய பேத்தி

இதையடுத்து, கிரேட்டர் மான்செஸ்டர் போலீஸுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் மூதாட்டியின் பேத்தி பாம் ஸ்மித். அதில், `` என் பாட்டியை கைது செய்த கிரேட்டர் மான்செஸ்டர் போலீஸுக்கு பெரிய நன்றி. என் பாட்டிக்கு 93 வயதாகிறது அவரது உடல்நிலை சற்று மோசமாகியும் வருகிறது. ` தன்னைக் கைது செய்த அனுபவத்தை உணர்ந்ததில்லை என்றும் தன்னைக் கைது செய்வதுதான் கடைசி ஆசை எனவும்’ என்னிடம் தொடர்ந்து கூறிவந்தார். என் பாட்டி தங்கமானவர். அவர் கைது செய்யப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். என் பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய காவலர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார். 

`அவரைக் கைது செய்ததற்கு நன்றி’ - 93 வயது மூதாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய பேத்தி
Vikatan
அடுத்த கட்டுரைக்கு