Published:Updated:

இறந்த தந்தையின் சட்டைக்குள் 2 வயது மகள் சடலம்! - உலகை உலுக்கிய புகைப்படம்

இறந்த தந்தையின் சட்டைக்குள் 2 வயது மகள் சடலம்! - உலகை உலுக்கிய புகைப்படம்
News
இறந்த தந்தையின் சட்டைக்குள் 2 வயது மகள் சடலம்! - உலகை உலுக்கிய புகைப்படம்

இறந்த தந்தையின் சட்டைக்குள் 2 வயது மகள் சடலம்! - உலகை உலுக்கிய புகைப்படம்

பிழைப்புக்காக மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த பலர் அமெரிக்காவில் ஆண்டுதோறும் குடியேறுவார்கள். இவர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறுவதாக குற்றம்சாட்டும் ட்ரம்ப் அதைத் தடுக்கும் விதமாகப் பல முயற்சிகளை மேற்கொண்டார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்குத்தான் சொந்தம் என்னும் பிரசாரம்தான் கடந்த தேர்தலில் அவரின் பிரதான ஆயுதம். 

இறந்த தந்தையின் சட்டைக்குள் 2 வயது மகள் சடலம்! - உலகை உலுக்கிய புகைப்படம்

பதவிக்கு வந்ததும் அமெரிக்கா மெக்ஸ்கோ இடையே எவராலும் கடக்க முடியாத 670 மைல் நீளம் கொண்ட உயரமான சுவரை எழுப்ப உத்தரவிட்டார். ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனம் எழுந்தது. அமெரிக்காவுக்குள்ளேயும் இந்தக் கண்டன குரல்கள் கேட்டது. ஆனால், ட்ரம்ப் எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் சுவர் கட்டும் பணிகளில் மும்முரமாக இறங்கினார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இறந்த தந்தையின் சட்டைக்குள் 2 வயது மகள் சடலம்! - உலகை உலுக்கிய புகைப்படம்

ஆண்டுதோறும் அமெரிக்காவை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் செல்வது தொடர்கதையாகி வருகிறது. அப்படி சட்ட விரோதமாகச் செல்லும்போது ரியோ கிராண்டே ஆற்றைக் கடக்க வேண்டும். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இந்த ஆற்றைக் கடக்கும்போது ஏற்படும் மரணங்கள் பல. கடந்த ஆண்டு மட்டும் இந்த எண்ணிக்கை 283 ஆக இருக்கிறது. இந்த ஆண்டு பலியானவர்களின் எண்ணிக்கை எதுவும் வெளியாகவில்லை. 

இறந்த தந்தையின் சட்டைக்குள் 2 வயது மகள் சடலம்! - உலகை உலுக்கிய புகைப்படம்

இந்த நிலையில், கடந்த ஞாயிறு அன்று மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரைச் சேர்ந்த ஆஸ்கர் அல்பெர்டோ என்னும் நபர் அமெரிக்காவில் குடியேறுவதற்கான கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதன் காரணமாக ஆற்றைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைவது என்ற முடிவை எடுத்துள்ளார். 

ஆஸ்கரின் குழந்தை தடுமாறி ஆற்றில் மூழ்க, குழந்தையைக் காப்பாற்ற ஆற்றுக்குள் சென்ற ஆஸ்கர், குழந்தையைத் தனது சட்டைக்குள் வைத்து நீந்த முயன்றிருக்கிறார். ஆனால், முடியாமல் தோற்றுப்போகவே இருவரின் உடல்களும் கரை ஒதுங்கியது. தந்தையின் சட்டைக்குள் இருக்கும் 2 வயது மகளின் கை தந்தையின் கழுத்தைச் சுற்றி இருக்கும் இந்தக் காட்சியைக் கண்ட பத்திரிகையாளர் ஜூலியா லி டக் தனது கேமராவில் படம் எடுத்தார். அதை அவர் வெளியிட, பார்ப்பவர்களின் மனதை உலுக்கி எடுக்கிறது. 

இறந்த தந்தையின் சட்டைக்குள் 2 வயது மகள் சடலம்! - உலகை உலுக்கிய புகைப்படம்

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய ஆஸ்கரின் மனைவி,  ``நான் ஆஸ்கரிடம் எத்தனையோ தடவை சொன்னேன். அங்கு செல்ல வேண்டாம் என்று. ஆனால், அவர்தான் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று சொன்னார். மகளைக் காப்பாற்ற நினைத்தார். ஆனால், அவரும் சேர்ந்து சென்றுவிட்டார்” என்றார். 

இந்தப் புகைப்படம் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகப் பெரியது. உலகம் முழுவதும் மீண்டும் இடம் பெயரும் மக்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். ட்ரம்பின் கொள்கைக்கு எதிராகவும் கண்டனங்கள் அதிகரித்துள்ளன. பலர் இதுபோன்ற கொடூர மரணங்களுக்கு ட்ரம்ப்தான் முழுப் பொறுப்பு எனப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இறந்த தந்தையின் சட்டைக்குள் 2 வயது மகள் சடலம்! - உலகை உலுக்கிய புகைப்படம்

2015-ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது சிரியாவிலிருந்து ஏராளமான அகதிகள் ஒரு படகில் துருக்கிக்கு பயணமாகினர். அப்போது அந்தப் படகு கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்த அய்லான் குர்தி என்னும் சிறுவனின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது. அந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் சிரிய போரின் கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது. தற்போது இந்தப் புகைப்படமும் இடம்பெயர்பவர்களின் வலியைக் குறிப்பதாக உள்ளது.