Published:Updated:

அகதிகள் மீது வான்வழித் தாக்குதல்! - சம்பவ இடத்திலேயே 40 பேர் பலி

அகதிகள் மீது வான்வழித் தாக்குதல்! - சம்பவ இடத்திலேயே 40 பேர் பலி
அகதிகள் மீது வான்வழித் தாக்குதல்! - சம்பவ இடத்திலேயே 40 பேர் பலி

லிபியாவில் உள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட வான் வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 80 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அகதிகள் மீது வான்வழித் தாக்குதல்! - சம்பவ இடத்திலேயே 40 பேர் பலி

PC : Twitter / @scalabriniani

லிபிய தலைநகர் திரிபோலிக்கு அருகே உள்ளது தஜாரா என்ற பகுதி. இது மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அதனால் அமெரிக்கா, அரபு மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக லிபியாவுக்கு வருபவர்கள் இந்த வழியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

எதியோப்பியா, சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு குடிபெயர்ந்து வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் சுமார் 600 வீடுகள் உள்ளன. இந்நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத போது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அகதிகள் மீது வான்வழித் தாக்குதல்! - சம்பவ இடத்திலேயே 40 பேர் பலி

PC : Twitter / @airnewsalerts

இதில் 40 அகதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 80-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு லிபிய ராணுவம்தான் காரணம் என திரிபோலி அரசு குற்றம் சாட்டியுள்ளது. 

லிபியாவில் உள்ள ஐ.நா ஆதரவு அமைப்பு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் திரிபோலி அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக லிபிய ராணுவம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

அகதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு லிபியாவில் உள்ள ஐ.நாவின் அகதிகள் அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என அஞ்சுவதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் ஒசாமா அலி தெரிவித்துள்ளார். 

Vikatan