Published:Updated:

எல்லைப் பிரச்னை: இந்தியா-சீனா இன்று பேச்சுவார்த்தை

விகடன் விமர்சனக்குழு
எல்லைப் பிரச்னை: இந்தியா-சீனா இன்று பேச்சுவார்த்தை
எல்லைப் பிரச்னை: இந்தியா-சீனா இன்று பேச்சுவார்த்தை
எல்லைப் பிரச்னை: இந்தியா-சீனா இன்று பேச்சுவார்த்தை

பீஜிங்: எல்லைப் பிரச்னை தொடர்பான இந்தியா - சீனா  இடையே பேச்சுவார்த்தை பீஜிங்கில் இன்று தொடங்குகிறது.

இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இன்று 16வது சுற்றுப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், சிறப்பு பிரதிநிதியுமான சிவசங்கர மேனன் கலந்து கொள்கிறார்.

##~~##
அவர் சீனாவின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள யாங் ஜிய்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.எல்லையில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர்.