Published:Updated:

இந்திய மாலுமிகளுடன் துருக்கி எண்ணெய் கப்பல் கடத்தல்!

இந்திய மாலுமிகளுடன் துருக்கி எண்ணெய் கப்பல் கடத்தல்!
இந்திய மாலுமிகளுடன் துருக்கி எண்ணெய் கப்பல் கடத்தல்!

இந்திய மாலுமிகளுடன் துருக்கி எண்ணெய் கப்பல் கடத்தல்!

மும்பை: இந்திய மாலுமிகள் 24 பேருடன் துருக்கியைச் சேர்ந்த எண்ணெய் கப்பல், கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான காபானில் உள்ள ஜென்டில் துறைமுகத்தில் இருந்து, துருக்கியைச் சேர்ந்த எம்.வி. காட்டன் என்ற எண்ணெய் கப்பல் நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 24 மாலுமிகள் இருந்தனர்.

##~~##
இந்தக் கப்பல் நேற்று அதிகாலையில் நைஜீரியா அருகில் சென்று  கொண்டிருந்தபோது கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.

இதனையடுத்து கப்பலுடனான தகவல் தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டது. இக்கப்பல், நைஜீரியா நோக்கி வடக்கில் பயணித்ததாக செயற்கைக்கோள் தகவல் தெரிவித்துள்ளது. அதன் பின்னர் அக்கப்பல், ஐவரி கோஸ்ட் நோக்கி திருப்பி விடப்பட்டிருக்கலாம் என்று துருக்கி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேமரூன் மற்றும் நைஜீரியா நாட்டுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, கப்பலையும் மாலுமிகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காபானுக்கான துருக்கி தூதர் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள கப்பல் போக்குவரத்து தலைமை அலுவலக அதிகாரிகளும், கப்பல் கடத்தப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.

பின் செல்ல