Published:Updated:

'விளையாட்டுகளில் வெற்றி பெற வயாகரா சாப்பிடுங்கள்': ரஷ்ய அதிபர் புதின் பேச்சால் சர்ச்சை

விகடன் விமர்சனக்குழு

மாஸ்கோ: விளையாட்டுகளில் வெற்றி பெற 'வயாகரா' மாத்திரைகளை பயன்படுத்துங்கள் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உலகளாவிய அளவில் உள்ள மாணவர்கள் பங்கேற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் கசான் நகரில் நடைபெற்றன. இந்த போட்டிகளில் 155 தங்கப் பதக்கங்களை பெற்று ரஷ்ய மாணவர்கள் முதல் இடத்தையும், 26 பதக்கங்களை பெற்று சீன மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், 24 பதக்கங்களை பெற்று ஜப்பான் மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

பதக்கம் வென்ற ரஷ்ய மாணவர்களுக்கு தலைநகர் மாஸ்கோ அருகே பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், 'இதைப் போன்ற மிகப்பெரிய வெற்றிகளை நாம் பெற்றிருந்தாலும், சிலர் நம்மை குறை கூறி வருவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

##~~##
அவர்களும் இதைப்போன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று நான் ஆலோசனை கூற விரும்புகிறேன். அவர்களுக்கு உடல் நல குறைபாடு ஏதாவது இருந்தால் டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளட்டும். அதேபோல் 'வயாகரா' சாப்பிடுவது கூட அவர்களுக்கு நல்ல பலனைத் தரும்' என்று கூறினார்.
ரஷ்ய அதிபர் புதினின் இந்த பேச்சு எதிர்கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஒரு நாட்டின் அதிபர் இதைப்போன்ற பொறுப்பற்ற வகையில் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல' என சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.