Published:Updated:

புதிய குழந்தையின் பெயர் 'ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்': வில்லியம்-கேத் தம்பதி அறிவிப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புதிய குழந்தையின் பெயர் 'ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்': வில்லியம்-கேத் தம்பதி அறிவிப்பு
புதிய குழந்தையின் பெயர் 'ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்': வில்லியம்-கேத் தம்பதி அறிவிப்பு

புதிய குழந்தையின் பெயர் 'ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்': வில்லியம்-கேத் தம்பதி அறிவிப்பு

புதிய குழந்தையின் பெயர் 'ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்': வில்லியம்-கேத் தம்பதி அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்து இளவரசரின் மூத்த மகன் வில்லியம்-கேத் தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு 'ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மூத்த மகன் வில்லியம்-கேத் மிடில்டன் தம்பதிக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இங்கிலாந்தின் பாரம்பரிய முறைப்படி 62 குண்டுகள் முழங்கியும், தேம்ஸ் நதிக்கரையில் வண்ண விளக்குகளால் அலங்கரித்தும் புதிய குழந்தைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் வில்லியம்-கேத் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

##~~##
இந்நிலையில் வில்லியம்-கேத் தம்பதிகள் தங்கள் முதல் வாரிசுக்கான பெயரை தேர்வு செய்துள்ளனர். இங்கிலாந்து அரச பரம்பரையின் 2ஆம் அரசரின் பெயரான ஜார்ஜ் என்ற பெயருடன், ராணி 2 ஆம் எலிசபெத், குழந்தையை பார்க்க வந்த போது பரிந்துரை செய்த பெயரையும் சேர்த்து 'ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்' என அந்த குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தம்பதிகள் அறிவித்தனர்.
அரச குடும்ப வழக்கப்படி இந்த குழந்தை, பிரின்ஸ் ஜார்ஜ் கேம்பிரிட்ஜ் என்ற பட்டத்துடன் அழைக்கப்படும் எனவும், அரச பரம்பரையின் 7ம் வாரிசு என்பதால் கிங் ஜார்ஜ் செவன் என்றும் அழைக்கப்படும் எனவும்  அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு