Published:Updated:

பிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் திருமணம்!

பிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் திருமணம்!

லண்டன், ஏப்.29,2011

பிரிட்டன் இளவரசர் வில்லியம்-கேத் மிடில்டன் திருமணம்!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் திருமணம் லண்டனில் இன்று நடைபெற்றது.

இந்திய நேரப்படி பிற்பகல் 4 மணியளவில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமண நிகழ்ச்சிகளை பிரிட்டன் ராணி எலிசபெத் முறைப்படி தொடங்கி வைத்தார்.

வில்லியம் - கேத் திருமணத்தை பேராயர் ரோவன் வில்லியம்ஸ் நடத்தி வைத்தார். "இறைவன் நடத்தி வைத்த திருமணத்தை மனிதன் பிரிக்காமல் இருப்பானாக" என்று அவர் பிரார்த்தனை செய்தார்.

காதலி கேத் மிடில்டனின் விரலில் மோதிரத்தை அணிவித்து மனைவியாக ஏற்றுக்கொண்டார் பிரிட்டன் இளவரசர் வில்லியம். பின்னர் புதுமணத் தம்பதிகள் உறுதிமொழிகளை ஏற்றனர்.

தாம் கணவராக தான் ஏற்கும் வில்லியம்முக்கு "அன்பையும் ஆதரவையும் கௌரவத்தையும் வழங்குவேன்" என்று கேத் மிடில்டன் திருமண உறுதிமொழி வழங்கினார்.

பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸுடனான இளவரசி டயானா திருமணத்தின்போது, "கணவனுக்கு கீழ் படிந்து நடப்பேன்" என்ற வரிகளை தனது திருமண உறுதிமொழியில் குறிப்பிடவில்லை. அதுபோலவே, கேத் மிடில்டனும் அந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

திருமண சம்பிரதாயங்கள் முடிந்ததும் புதுமணத் தம்பதிகள் சாரட் வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சாரட் வண்டியில் புறப்பட்டனர். வழிநெடுகிலும் குழுமியிருந்த மக்களிடம் வாழ்த்துகளை கையசைத்தபடி பெற்றனர். ##~~##

அரச குடும்பத்தின் திருமணத்தை முன்னிட்டு லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

இந்தத் திருமணத்தையொட்டி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் லண்டன் வீதிகளில் திரண்டிருந்தனர்.

அரச குடும்பத்து திருமண வைபவத்தின் நேரலையை தொலைக்காட்சிகள், இணையதளம் மூலம் ஏறத்தாழ 200 கோடி மக்கள் கண்டு களித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 அரச குடும்பத்துக்கும், சர்வதேச பிரபலங்கள் பலருக்கும் திருமணத்துக்கு நேரில் வாழ்த்தினர். திருமணத்துக்காக உலகம் முழுவதும் சுமார் 1,900 பிரபலங்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

இது காதல் திருமணம். இந்த வைபவத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள தெருக்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

தனது தந்தை இளவரசர் சார்லஸுக்குப் பிறகு பிரிட்டிஷ் மன்னர் பட்டத்துக்கான வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளவர், இளவரசர் வில்லியம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்த திருமணத்துக்காக பெருமளவில் பணம் வீணடிக்கப்படுவதாக பிரிட்டனில் எதிர்க்கட்சியான உள்ள குடியரசுக் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

பிரிட்டன் இளவரசர் திருமணத்தை முன்னிட்டு மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. ஆடம்பரமாக பெருமளவில் பணம் செலவிடப்படுகிறது என்று குடியரசுக் கட்சி குறை கூறியிருந்தது.

அடுத்த கட்டுரைக்கு