Published:Updated:

மே 16-ல் இலங்கை அமைச்சர் இந்தியா வருகை!

Vikatan Correspondent

கொழும்பு, மே 4,2011

போர்க் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் இருந்து தம்மை காத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு, இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ##~~##

இதையொட்டி, இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வரும் 16-ம் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் இருந்து தமது நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள சர்வதேச நாடுகளின் உதவியினை இலங்கை அரசு கோரி வருகிறது.

இந்த விவகாரத்தில் தமக்கு ஆதரவு அளிக்கக் கோருவதற்காக, இந்தியாவுடன் பேச்சு நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்பட இந்தியாவின் முக்கிய அதிகாரிகளையும் இலங்கை அமைச்சர் பிரீஸ் சந்தித்துப் பேசவுள்ளார்.

இதைத் தொடர்ந்து, சீனாவின் ஆதரவைப் பெறுவதற்காக, அந்நாட்டுக்கு வரும் 24-ம் பீரிஸ் பயணம் மேற்கொள்வார் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல், மே 26, 27 ஆகிய நாட்களில் இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெறும் மாநாட்டிலும் பல்வேறு வெளியுறவு அமைச்சர்களிடம் இலங்கை அரசு பேசவுள்ளது.