Published:Updated:

சோனியாகாந்தி விரைவில் குணம்பெற பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து!

Vikatan Correspondent
சோனியாகாந்தி விரைவில் குணம்பெற பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து!
சோனியாகாந்தி விரைவில் குணம்பெற பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து!
சோனியாகாந்தி விரைவில் குணம்பெற பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து!

இஸ்லாமாபாத்: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சோனியாகாந்திக்கு, பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து செய்தியும், மலர் கொத்தும் அனுப்பியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் தேதி, பாராளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா மீது  நடந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி கலந்து கொண்டு பேசினார். அதன்பின் அவருக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பின் அவர் மறுநாள் வீடு திரும்பினார்.

இந்நிலையில், சோனியா காந்தி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சார்பில் வாழ்த்துச் செய்தியும், மலர்க்கொத்தும் அனுப்பி வைக்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகி உள்ளது. புதுடெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் மூலம் இந்த மலர்க்கொத்தும் வாழ்த்து செய்தியும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

##~~##
பாகிஸ்தான் பிரதமர் அனுப்பிய வாழ்த்து செய்தியில், ‘‘விரைவில் குணம்பெற வாழத்துக்கள்’’ என்று எழுதப்பட்டு இருந்தது. இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் சோனியாகாந்திக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.