Published:Updated:

ஈரான் பிடித்து வைத்திருந்த இந்திய எண்ணெய் கப்பல் விடுவிப்பு!

Vikatan Correspondent
ஈரான் பிடித்து வைத்திருந்த இந்திய எண்ணெய் கப்பல் விடுவிப்பு!
ஈரான் பிடித்து வைத்திருந்த இந்திய எண்ணெய் கப்பல் விடுவிப்பு!
ஈரான் பிடித்து வைத்திருந்த இந்திய எண்ணெய் கப்பல் விடுவிப்பு!

டெஹ்ரான்: சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதாகக் கூறி, ஈரானால் பிடித்து செல்லப்பட்ட இந்திய எண்ணெய் கப்பலை விடுவிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய அரசுக்கு சொந்தமான 'எம்டி தேஷ் சாந்தி' என்ற எண்ணெய் கப்பல், கடந்த ஆகஸ்ட் மாதம் ஈராக்கில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு ஈரான் வழியாக இந்தியா வந்து கொண்டிருந்தது.

அந்த கப்பல் வளைகுடா கடற் பகுதியில் வந்தபோது, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி விட்டதாகக்கூறி, ஈரான் நாட்டு கடற்படையினர் இந்திய எண்ணெய் கப்பலை பிடித்து சென்றனர்.

##~~##
இதையடுத்து, இந்திய அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததன் பேரில், அந்த கப்பலை விடுவிக்குமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.