Published:Updated:

ஐ.நா. சபையில் செப்டம்பர் 28ல் உரையாற்றுகிறார் மன்மோகன் சிங்!

Vikatan Correspondent
ஐ.நா. சபையில் செப்டம்பர் 28ல் உரையாற்றுகிறார் மன்மோகன் சிங்!
ஐ.நா. சபையில் செப்டம்பர் 28ல் உரையாற்றுகிறார் மன்மோகன் சிங்!
ஐ.நா. சபையில் செப்டம்பர் 28ல் உரையாற்றுகிறார் மன்மோகன் சிங்!

ஐ.நா: ஐ.நா. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் வரும் 28 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்ற உள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ள உலக தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேற்கண்ட தகவல் இடம் பெற்றுள்ளது.

##~~##
முன்னதாக பிரதமர் செப்டம்பர் 27 ஆம் தேதி உரையாற்றுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், பட்டியல் இறுதி செய்தபோது, பிரதமர் வருகை மற்றும் ஒபாமாவுடன் சந்திப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவரது உரை நிகழ்ச்சி 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 27 ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சந்தித்து பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.