Published:Updated:

இலங்கை வடக்கு மாகாண முதல்வராக சி.வி.விக்னேஸ்வரன் தேர்வு!

இலங்கை வடக்கு மாகாண முதல்வராக சி.வி.விக்னேஸ்வரன் தேர்வு!
இலங்கை வடக்கு மாகாண முதல்வராக சி.வி.விக்னேஸ்வரன் தேர்வு!
இலங்கை வடக்கு மாகாண முதல்வராக சி.வி.விக்னேஸ்வரன் தேர்வு!

யாழ்ப்பாணம்: வடக்கு மாகாண முதலமைச்சராக, ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை, வடக்கு மாகாண கடந்த 21ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது.

இதையடுத்து, அக்கட்சியின் சார்பில் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், அக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், உறுப்பினர்கள் 28 பேரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ஓய்வு பெற்ற நீதிபதியான சி.வி.விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதல்வராக ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர்.

##~~##
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், மற்றும் நியமன உறுப்பினர்களின் பெயர்களை இலங்கை தேர்தல் ஆணையாளர் வர்த்தமானி மூலம், வெளியிட்ட பின்னர், ஆட்சியமைக்க வருமாறு வடக்கு மாகாண ஆளுனர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.