Published:Updated:

இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து அதீத கவனம்: நவநீதம்பிள்ளை உறுதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து அதீத கவனம்: நவநீதம்பிள்ளை உறுதி
இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து அதீத கவனம்: நவநீதம்பிள்ளை உறுதி

இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து அதீத கவனம்: நவநீதம்பிள்ளை உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஐ.நா.: இலங்கை மனித உரிமை நிலவரம் தொடர்பான தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் அதீத கவனத்துடன் செயல்படுவதாகவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம்பிள்ளை மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை நேரில் ஆய்வு செய்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில், இலங்கையில் 2008ஆம் ஆண்டுக்கு முன்பு இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் மறுகுடியேற்றம் செய்யப்படவில்லை என்றும், மறுகுடியேற்றம் செய்யப்பட்ட பலர், வாழ்வாதாரத்தை இழந்து வாடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இலங்கை மனித உரிமை நிலவரம் தொடர்பான தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம்பிள்ளை உறுதிபட தெரிவித்துள்ளார்.

##~~##
இந்த விவகாரத்தில் அதீத கவனத்துடன் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே இலங்கையில் மனித உரிமைகள் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ள பல்வேறு அம்சங்களை நிறைவேற்றி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு