Published:Updated:

நாகை, காரைக்கால் மீனவர்கள் 31 பேர் விடுதலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாகை, காரைக்கால் மீனவர்கள் 31 பேர் விடுதலை
நாகை, காரைக்கால் மீனவர்கள் 31 பேர் விடுதலை

நாகை, காரைக்கால் மீனவர்கள் 31 பேர் விடுதலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாகை, காரைக்கால் மீனவர்கள் 31 பேர் விடுதலை

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள நாகை, காரைக்கால் மீனவர்கள் 31 பேரை விடுதலை செய்ய யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்புகி்ன்றனர்.

நாகப்பட்டினத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற நாகை, காரைக்காலை சேர்ந்த 31 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இதையடுத்து, அவர்கள் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டனர்.

45 நாட்களாக சிறையில் இருந்து வரும் மீனவர்கள் 31 பேரும் நேற்று காலை திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துமாறு திரிகோணமலை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் மீண்டும் இன்று காலை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மீனவர்கள் 31 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், படகுகள் குறித்து டிசம்பர் 17ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டு வரும் இலங்கை நீதிமன்றம் மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில்லை. இது தொடர்பான வழக்குகளின் விசாரணையை மாதக்கணக்கில் தள்ளி வைத்து உத்தரவிட்டு வருகிறது.

ஏற்கனவே தமிழக மீனவர்களின் 5 படகுகளை நாட்டுமையாக்குமாறு இலங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சியுள்ள தமிழக மீனவர்களது படகுகளையும் பறிமுதல் செய்யவே இந்த காலதாமதம் செய்வதாக தமிழக மீனவர்கள் கருதுகின்றனர். எனவே தங்களது படகுகளை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய - மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இரா.மோகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு