Published:Updated:

ஓடு பாதையில் தீயணைப்பு வாகனம் மீது மோதிய விமானம்... தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி!

விமான விபத்து ( ட்விட்டர் )

பெருவிலுள்ள லிமாவின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட LATAM ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெருவிலுள்ள லிமாவின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து LATAM ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் புறப்பட்டது. இந்த விமானத்தில் 102 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் இருந்தனர். இந்த விமானம், விமான தள ஓடுபாதையில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக தீயணைப்பு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், தீயணைப்பு வாகனத்தில் வந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். ஆனால், இந்தச் சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என விமான நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மேலும், இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் விபத்துக்கான காரணங்களையும் அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள், ``விமானத்தில் பயணித்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கிவருகிறோம். மேலும் விபத்து தொடர்பாக விசாரித்துவருகிறோம்" எனத் தெரிவித்தனர்.