Published:Updated:

Nobel Prize 2022: அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார், யார் தெரியுமா?

2022-ம் ஆண்டிற்கான நோபல் பரிசு

இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழக்கறிஞர் ஒருவருக்கும் இரண்டு அமைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Prize 2022: அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார், யார் தெரியுமா?

இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழக்கறிஞர் ஒருவருக்கும் இரண்டு அமைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
2022-ம் ஆண்டிற்கான நோபல் பரிசு

2022-ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அக்டோபர் 3-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மரபியல் நிபுணரான ஸ்வாண்டே பாபோ பெற்றார். இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டின் அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜூன் எப் கினாசர் மற்றும் ஆஸ்திரியாவின் அண்டன் ஸிலிங்கர் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டது.

வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கேரோலின் பெர்டோசி, டென்மார்க்கின் மார்டென் மெல்டால் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு Annie Ernaux-ஸிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிற்கும் (Ales Bialiatski), ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஆவணபடுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக அலெஸ் பியாலியாட்டிஸிற்கும், ரஷ்யா உக்ரைன் மேல் போர் தொடங்கியதில் இருந்து நடக்கும் போர்க் குற்றங்களைப் பற்றித் தொடர்ந்து உலக அரங்கில் எடுத்துரைத்து வந்த ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு நினைவகத்திற்கும், மனித உரிமைகளைக் காத்தல், உக்ரைன் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஆற்றிய பெரும் பங்கு போன்றவற்றிற்காக உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பிற்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுள்ளது.