Published:Updated:

இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்த 24 இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்த 24 இலங்கை மீனவர்கள் கைது!
இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்த 24 இலங்கை மீனவர்கள் கைது!
இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்த 24 இலங்கை மீனவர்கள் கைது!

தூத்துக்குடி: இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த 24 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி கடலோர பகுதியான, மன்னார்வளைகுடா அருகே இன்று அதிகாலையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘வைபவ்’ படகில் கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, இந்திய எல்லைப்பகுதிக்குள் 4 படகுகளில் இலங்கையை சேர்ந்த 24 மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து, இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 24 பேரையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

##~~##
அவர்கள் வந்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களது படகுகளில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரம் கிலோ மீன்களையும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்படையினர், 24 மீனவர்களையும் தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.