Published:Updated:

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் 33 நாடுகள் பங்கேற்பு!

விகடன் விமர்சனக்குழு
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் 33 நாடுகள் பங்கேற்பு!
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் 33 நாடுகள் பங்கேற்பு!
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் 33 நாடுகள் பங்கேற்பு!

கொழும்பு: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் 33 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.

காமன்வெல்த் மாநாடு வரும் 15ஆம் தேதி கொழும்பில் நடைபெறுகிறது. மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக கனடா பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்கப் போவதாக 33 நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

##~~##
இதனிடையே, 30 சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள், 10 வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள், சனல் 4 ஊடக நிறுவனம், 10 வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்கள் போன்ற தரப்பினர் மாநாட்டை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இந்தியா உள்ளிட்ட சுமார் 19 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து இதுவரையில் உறுதிபட அறிவிக்கப்படவில்லை.