Published:Updated:

தனி நாடு பேச்சுக்கே இடமில்லை: ராஜபக்சே திட்டவட்டம்!

தனி நாடு பேச்சுக்கே இடமில்லை: ராஜபக்சே திட்டவட்டம்!
தனி நாடு பேச்சுக்கே இடமில்லை: ராஜபக்சே திட்டவட்டம்!
தனி நாடு பேச்சுக்கே இடமில்லை: ராஜபக்சே திட்டவட்டம்!

கொழும்பு: "இலங்கையை பிரித்து தனிநாடு அமைப்பது என்பதை அனுமதிக்கவே முடியாது" என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே திட்டவட்டாக கூறினார்.

காமன்வெல்த் மாநாட்டையொட்டி கொழும்பில் இன்று பேட்டியளித்தபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாழ்வா, சாவா என்ற நிலையில்தான் இலங்கையில் சண்டையை நடத்தியது ராணுவம் என்று கூறிய ராஜபக்சே, கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் குண்டுவெடிப்பு ஏதும் இல்லை என்றார்.

விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் நேரில் வந்து தமிழர்களின் நிலையை அறியலாம் என்றும் அவர் கூறினார்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பது திருப்தியளிக்கிறது என்றும் ராஜபக்சே தெரிவித்தார்.

உலக நாடுகளிடம் இலங்கை அரசு எதையும் மறைக்கவில்லை என்றும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசின் எல்.எல்.ஆர்.சி குழு விசாரித்தது என்றும் ராஜபக்சே கூறினார்.

##~~##
இலங்கையின் நீதித்துறைக்கு சர்வதேச நாடுகள் மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ராஜபக்சே, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு உறுதியானால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க தயார் என்றார்.
30 ஆண்டுகளாக மனித உரிமை மீறலால் இலங்கை பாதிக்கப்பட்டிருந்தது என்றும், 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் குடிமக்களில் ஒருவர் கூட கொல்லப்படவில்லை என்றும் ராஜபக்சே கூறினார்.