Published:Updated:

இலங்கை பிரச்னையில் நான் செய்வது சரியே: சேனல் 4 கெலம் மக்ரே

இலங்கை பிரச்னையில் நான் செய்வது சரியே: சேனல் 4 கெலம் மக்ரே
இலங்கை பிரச்னையில் நான் செய்வது சரியே: சேனல் 4 கெலம் மக்ரே
இலங்கை பிரச்னையில் நான் செய்வது சரியே: சேனல் 4 கெலம் மக்ரே

கொழும்பு: இலங்கை பிரச்னையில் நான் செய்து வருவது சரியானதே" என்று  சேனல் 4 தொலைக்காட்சியின் ஆவண பட இயக்குனர் கெலன் மக்ரே கூறினார்.

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சேனல் 4 செய்தியாளர் கெலம் மக்ரே இயக்கிய 'போர் தவிர்ப்பு வலயம்' ஆவணப்படம் இலங்கை உட்பட உலகம் முழுவதும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாடு தொடர்பான செய்தி சேகரிப்புக்காக இலங்கை வந்த மக்ரேவுக்கு எதிராக, விமான நிலையத்தில்  ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, கெலம் மக்ரே விடுதலைப்புலிகளிடம் சம்பளத்தை பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டது. மேலும், வடபகுதிக்கு அவர் செல்ல மேற்கொண்ட முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

இது குறித்த  பதிலளித்த மக்ரே, இது ஆதாரமற்றதும் அடிப்படையற்றதுமான குற்றச்சாட்டு எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், "நான் முதலாவது காணொளி ஆவணப்படத்தை இலங்கையில் தயாரித்தேன். அதன் பின்னர் சில தகவல்களையும் காணொளி காட்சிகளையும் பெற்றேன்" என்றார்.

##~~##
இந்த காணொளிகள் உண்மையானது என்பதற்கு என்ன உத்தரவாதம் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மக்ரே, "அது ஒளிப்பரப்படும் முன்னர் அதன் நம்பகத்தன்மை சரிபார்க்கப்பட்ட பின்னரே ஒளிப்பரப்பட்டது" என்றார்.
"எனது இறுதி காணொளி ஆவணப்படம் காமன்வெல்த் மாநாட்டுக்கு முன்னர் தயாராகியது. எனினும் சோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் அது வெளியிடப்படவில்லை" என்று மக்ரே கூறினார்.
ஒரு ஊடகவியலாளன் என்ற முறையில் எனது கடமைகளை முன்னெடுக்க இலங்கை வருவதற்கான விசா வழங்கப்பட்டது என்று கூறிய மக்ரே, எனினும் இலங்கைக்கு வந்த நாள் முதல் புலனாய்வுதுறை மூலம் எனது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன என்றும், இது ஏமாற்றத்தை அளிக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.