Published:Updated:

அணுசக்தி திட்டங்களை நிறுத்த ஈரான் சம்மதம்!

விகடன் விமர்சனக்குழு
அணுசக்தி திட்டங்களை நிறுத்த ஈரான் சம்மதம்!
அணுசக்தி திட்டங்களை நிறுத்த ஈரான் சம்மதம்!
அணுசக்தி திட்டங்களை நிறுத்த ஈரான் சம்மதம்!

ஜெனீவா: அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடையே நடந்த பேச்சு வார்த்தையில் அணுசக்தி திட்டங்களை நிறுத்திக்கொள்ள ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.

ஈரான் தொடர்ந்து அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதனால் அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா. சபை பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அணுசக்தி பிரச்னையில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஜெனீவாவில் நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, ஈரான்மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அதிபர் ஒபாமாவை வலியுறுத்தினர்.

##~~##
ஈரான் அணுசக்தி பிரச்னைக்கு ராஜ்யரீதியில் தீர்வு காண வசதியாக அந்த நாட்டின்மீது புதிய பொருளாதாரத் தடை விதிக்க 6 மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்களிடம் ஒபாமா வலியுறுத்தினார். இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பேசும்போது, ‘‘ஈரானுடன் உடன்படிக்கை செய்துகொள்ளாவிட்டால், அந்த நாடு தொடர்ந்து யுரேனியம் செறிவூட்டும் செயலில் ஈடுபடும்’’ என எச்சரித்தார்.
இந்நிலையில், இந்த பிரச்னையில் ‘பி5பிளஸ்1’ என்று அழைக்கப்படுகிற அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 நாடுகளின் தூதர்கள் ஜெனீவாவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையின் இறுதியில், ஈரான் தற்காலிகமாக உடன்படிக்கைக்கு சம்மதம் தெரிவித்துள்ளது.